விஜய் என்றால் வெற்றி.. சினிமாவில் கிடைத்தது அரசியலில் கிடைக்குமா?

தமிழ் சினிமாவில் இன்றைய நிலையில் அதிக மார்க்கெட் உள்ள நடிகர் விஜய் என்பதும் அவர்தான் அதிக அளவில் சம்பளம் வாங்குகிறார் என்பதும் அவரது படங்கள் பூஜை போட்ட அன்றே கோடிக்கணக்கான ரூபாய்க்கு வியாபாரம் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக ரஜினிகாந்த் இருந்தாலும் விஜய் தான் இன்றைய நிலையில் வியாபார ரீதியில் நம்பர் ஒன் நடிகர் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

அதுமட்டுமின்றி தனது ரசிகர்களை கட்டுக்கோப்பாக ஒரு இயக்கமாக செயல்படுத்தி வருகிறார் என்பதும் விஜய் மக்கள் இயக்கம் என்பது தற்போது ரசிகர் மன்றமாக இருந்தாலும் அது எந்த நாளிலும் அரசியல் இயக்கமாக மாறும் நிலையில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகள் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர் என்பதும் இதனை அடுத்து 2026 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான ஆயத்த பணிகளில் விஜய் மற்றும் அவரது ரசிகர்கள் ஈடுபட்டு வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Vijay 4

முதல் கட்டமாக அரசியல் தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யும் வழக்கத்தை கொண்டு வந்த விஜய் அடுத்த கட்டமாக 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கும் விழாவையும் வெற்றிகரமாக நடத்தினர்.

தனது சொந்த காசு 2 கோடி ரூபாயை செலவழித்து இந்த விழாவை அனைவரும் அசரவைக்கும் போல நடத்தினார் என்பதும் ஓரிரு மாணவர்களுக்கு பெயருக்கு சான்றிதழை கொடுத்து விட்டு செல்லாமல் 1400 மாணவர்களுக்கும் அவரே தன் கைப்பட கொடுத்தது என்பது நிச்சயம் பாராட்ட தகுந்த ஒரு செயலாக கருதப்படுகிறது.

இது எல்லாம் வைத்து பார்க்கும் போது விஜய் நிச்சயம் அரசியலில் காலடி எடுத்து வைப்பார் என்று கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் இதற்கு முன்னர் அரசியலுக்கு வந்த நடிகர்கள் யாருமே வெற்றி பெறாத நிலையில் விஜய்க்கு அந்த வெற்றி கிடைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஆகிய இரண்டு ஆளுமையுள்ள தலைவர்கள் இருக்கும்போது அரசியலுக்கு வந்த விஜயகாந்த், சரத்குமார், பாக்கியராஜ், டி ராஜேந்தர் உள்ளிட்ட சினிமா நட்சத்திரங்கள் அரசியலை சமாளிக்க முடியாமல் ஒதுங்கினர். அதேபோல் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வருவார் என்ற நினைத்த நிலையில் திடீரென பின் வாங்கினார்.

அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டு ஜாம்பவான்கள் தங்களுக்குள் எதிரிகளாக ஒருவரை ஒருவர் நினைந்து கொண்டாலும் புதிய ஒருவர் அரசியலுக்கு வருவதை அவர்கள் விரும்பவில்லை என்றும் இருவரும் சேர்ந்து புதிதாக வருபவரை தோற்கடித்து விடுவார்கள் என்பது தான் தமிழக அரசியலின் வரலாறாக உள்ளது. இந்த வரலாற்றை விஜய் உடைத்தெறிவாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஆனால் அதே நேரத்தில் கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஆகிய ஆளுமை உள்ள தலைவர்கள் இப்போது இல்லாத நிலையில் எந்த விதமான அரசியல் பின்னணி மற்றும் திரையுலக பின்னணி இல்லாமல் அண்ணாமலை தற்போது அரசியலில் ஒரு சூப்பர் ஸ்டார் ஆக விளங்கி வருகிறார் என்றும் அதேபோல் விஜய்யும் அரசியலுக்கு நுழைய இது தான் சரியான நேரம் என்று அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.

விஜய்யின் அரசியல் ஆர்வம் கண்டிப்பாக அவருக்கு சாதகமாக இருக்கும் என்று கூறப்பட்டாலும் அதிமுக, திமுக என்ற இரண்டு ஜாம்பவான்கள் கட்சிகளுக்கு இடையே அவர் வெற்றி பெற முடியுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

விஜய் இதுவரை பெரிய சவாலான நிகழ்வுகளை சந்தித்ததில்லை. ஆனால் அரசியல் என்று வந்துவிட்டால் அவர் பல கடுமையான விமர்சனங்களை சந்திக்க வேண்டிய நிலை இருக்கும். குறிப்பாக குடும்பத்தை கூட விமர்சனம் செய்யும் நிலை ஏற்படும். அதையெல்லாம் பொறுத்து அவர் அரசியலில் தாக்குப் பிடித்து தனது இலக்கை எட்டுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

சினிமாவில் அவர் சந்திக்காத சாதனையே இல்லை என்ற நிலையில் அரசியலிலும் அதே சாதனையை நிலை நிறுத்துவாரா என்பதை காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

இந்த நிலையில் விஜயின் பிறந்தநாளுக்கு Tamil Minutes சார்பாக அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

Published by
Bala S

Recent Posts