தளபதி 68 படத்தின் ரிலீஸ் தேதியை முடிவு செய்த விஜய்! தளபதி ரசிகர்களுக்கான மாஸ் அப்டேட் இதோ!

கோலிவுட் மாஸ் ஹீரோவான விஜய் தற்போது தளபதி 68வது படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இந்த ஆண்டு வெளியான வாரிசு, லியோ படங்களை தொடர்ந்து விஜயின் தளபதி 68 திரைப்படமும் ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான லியோ திரைப்படம் 650 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்தது குறிப்பிடத்தக்கது . விஜய் வெங்கட் பிரபு கூட்டணி முதன்முறையாக உருவாகும் தளபதி 68 திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்த படத்தில் அப்பா மகன் என இரண்டு கதாபாத்திரத்தில் தளபதி விஜய் நடித்து வருகிறார். தல அஜித்திற்கு மங்காத்தா திரைப்படத்தை போலவும் நடிகர் சிம்புவிற்கு மாநாடு திரைப்படத்தை போலவும் விஜய்க்கு இந்த தளபதி 68 திரைப்படம் அமைய வேண்டும் மிகப் பெரிய வெற்றியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்பதற்காக இயக்குனர் வெங்கட் பிரபு மிக கவனமுடன் ஒவ்வொரு காட்சிகளையும் எடுத்து வருவதாக சினிமா வட்டாரங்களில் தகவல் வெளியாகி உள்ளது. இதனால் தளபதி 68 விஜயின் ஸ்டைல் கெட்டப் எல்லாமே வேற லெவலில் இருக்கும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் தளபதி 68 படத்தில் ரிலீஸ் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் தொடங்கிய தளபதி 68 சூட்டின் அசுர விதத்தில் நடைபெற்று வருகிறது. சென்னை, தாய்லாந்து படப்பிடிப்புகளை தொடர்ந்து மீண்டும் சென்னை, துருக்கி தற்போது ஹைதராபாத் என தளபதி 68 படத்தின் படப்பிடிப்புகள் நடந்து வருகிறது. மேலும் இயக்குனர் வெங்கட் பிரபு அடுத்த ஆண்டு பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்திற்குள் தளபதி 68 படத்தின் அனைத்து படப்பிடிப்புகளும் முடித்து விட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

நடிகர் திலகம் சிவாஜியை நேரில் சந்தித்து கதை சொல்லிய பாலா! அந்த சிங்கத்திடம் பட்ட பாடு என்ன?

இதனால் தளபதி 68 படத்தின் ரிலீஸ் தேதியை நடிகர் விஜய் முடிவு செய்துவிட்டதாக சொல்லப்படுகிறது. அதன்படி தளபதி 68 படத்தை 2024 ஆம் ஆண்டு ஜூன் அல்லது ஜூலை மாதம் வெளியிட விஜய் பிளான் செய்துள்ளாராம். கோடை விடுமுறை அல்லது தீபாவளி என எந்த சிறப்பு நாட்களும் இல்லாமல் சாதாரண நாட்களில் தளபதி 68 படத்தை வெளியிடப்பட படக்குழு யோசித்து வருகிறதாம். இதனிடையே ஜனவரி ஒன்றாம் தேதி தளபதி 68 டைட்டில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் தளபதி 68 திரைப்படத்தில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வரும் நிலையில் ஃபர்ஸ்ட் சிங்கள் தர லோக்கலில் தயாராக உள்ளதாகவும் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். அதைத்தொடர்ந்து தளபதி 68 படத்தில் ஐந்து பாடல்கள் உள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. இந்த படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார். மேலும் படத்தில் டாப் ஸ்டார் பிரசாந்த், நடன புயல் பிரபுதேவா, லைலா, சிநேகா, யோகி பாபு, ஜெயராம்,இயக்குனர் வெங்கட் பிரபுவின் தம்பி பிரேம்ஜி என பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க உள்ளனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.