மீண்டும் போட்டோகிராஃபரான விஜய்!.. இப்போ தாய்லாந்தில் யாரை போட்டோ எடுத்திருக்காரு பாருங்க!..

தாய்லாந்தில் தளபதி 68ல் தன்னுடன் இணைந்து நடித்த இரு முன்னணி நடிகர்களை நிற்க வைத்து விஜய் எடுத்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘தளபதி 68’ படம் 2012 ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளியான ‘லூப்பர்’ படம் மூலம் ஈர்க்கப்பட்டதாகவும், இப்படம் ஒரு ஹாலிவுட் படத்தின் ரீமேக் மட்டுமல்லாமல் இது ஒரு அறிவியல் புனைவு கதை ஆக்ஷன் படமாக இருக்கும் என்று தகவல்கள் பரவி வருகின்றன.

தளபதி 68 ஹாலிவுட் படக் கதையா?

ஜோசப் கார்டன்-லெவிட் மற்றும் புரூஸ் வில்லிஸ் இருவரும் வெவ்வேறு காலகட்டங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர் , அதே போல விஜய்யும் இரட்டை வேடத்தில் நடித்து ரசிகர்களுக்கு இரட்டை விருந்தளிப்பார் என எதிர்ப்பார்க்கபடுகிறது. இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

விஜய் நடிப்பில் தற்போது வெளியான லியோ படமும் ஹாலிவுட் படமான ‘ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ்’ மூலம் ஈர்க்கப்பட்டது என்பதனால் தளபதி 68ம் விஜய்க்கு மீண்டும் ஹாலிவுட் இன்ஸ்பிரேஷன் படமாக இருக்குமா என்கிற கேள்வி எழுந்துள்ளது. லியோ படத்தின் வெற்றியை தளபதி 68 தொடுமா, லோகேஷ் கணகராஜை தான் வெங்கட் பிரபு தோற்கடிப்பாரா என்பதை பார்ப்பதர்க்காக ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

இந்த புகைப்படம் விஜய் க்ளிக்கியது

தளபதி 68 ஆடியோ உரிமையை பெற்றது டி-சீரிஸ் மியுசிக் லேபிள். மேலும் , தளபதி 68ல் பிரசாந்த், பிரபு தேவா, லைலா, சினேகா, ஜெயராம், வி.டி.வி கணேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பாளராகவும், மதன் கார்த்திக் பாடளுக்கும் ,சிந்தாத்தா நுனி ஒளிப்பதிவாளராகவும், வெங்கட் ராஜன் எடிட்டிங்கும் , தீலிப் சுப்புராயன் ஸ்ட்ன்ட் இயக்குனராகவும் பணிபுரியயிருக்கின்றனர்.

தளபதி 68 படப்பிடிப்பைத் வெங்கட் பிரபு, முதலில் சென்னை அடுத்து தாய்லாந்து என இரண்டு இடங்களிலும் எடுத்துள்ளார். இந்நிலையில் தளபதி 68 ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய் எடுத்த புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்னர் லோகேஷ், அட்லீ, நெல்சன் தனது அன்புத் தம்பிகளை புகைப்படம் எடுத்திருந்தார் விஜய்.

அதேபோல், இம்முறை தனது நண்பர்களான நடனப் புயல் பிரபுதேவா, ஸ்ரீமன் இருவரையும் ஸ்மார்ட்டாக போட்டோ எடுத்துள்ளார் விஜய். விஜய் நடிப்பில் போக்கிரி, வில்லு என இரண்டு படங்களை இயக்கியுள்ளார் பிரபுதேவா அதேபோல் விஜய்யின் நெருங்கிய நண்பரான ஸ்ரீமன் வசீகரா, போக்கிரி உள்ளிட்ட பல படங்களில் இணைந்து நடித்துள்ளார். இந்நிலையில் இருவரும் தளபதி 68ல் ஒன்றாக இணைந்து நடித்து வருகின்றனர். அவர்கள் இருவரையும் ஒன்றாக நிற்க வைத்து விஜய் எடுத்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews