விஜய், அஜித்னா ஓகே.. விக்ரம்-னு சொன்னதும் தெறித்து ஓடிய திரிஷா!

சினிமாவில் துணை நடிகையாக தனது திரைப்பயணத்தை தொடங்கிய நடிகை திரிஷா மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார். 2002 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் 21 வருடங்களை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த கொண்டாட்டத்தை தொடர்பாக நடிகை திரிஷா வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டு தனது ரசிகர்களுக்கு நன்றியை பகிர்ந்து கொண்டார். மௌனம் பேசியதே திரைப்படத்தில் நடிகை திரிஷா சூர்யாவுடன் இணைந்து நடித்திருப்பார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து திரிஷா ஸ்ரீகாந்த் உடன் இணைந்து மனசெல்லாம் திரைப்படத்தில் நடித்திருப்பார். அதைத் தொடர்ந்து திரிஷாவின் திரை வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் தான் சாமி.

இந்த திரைப்படம் திரிஷாவிற்கு மிகப்பெரிய வெற்றியை ஏற்படுத்திக் கொடுத்தது. இதைத் தொடர்ந்து ரஜினி, விஜய், அஜித், தனுஷ், ஜெயம் ரவி, சிம்பு என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து திரிஷா பல படங்களில் நடித்துள்ளார். 20 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாகவும் இளைஞர்களின் கனவு கன்னியாகவும் வலம் வரும் திரிஷா தமிழைத் தொடர்ந்து மலையாளம், தெலுங்கு மொழிகளில் மட்டும் இன்றி வெப் சீரியஸ்களிலும் கால் பதித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் திரிஷா நடிப்பில் வெளியான திரைப்படம் லியோ தளபதி விஜய் உடன் ஐந்தாவது முறையாக இணைந்து திரிஷா நடித்த இந்த திரைப்படம் உலக அளவில் 650 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்தது குறிப்பிடத்தக்கது.

அதைத் தொடர்ந்து நடிகை திரிஷா தல அஜித் உடன் இணைந்து விடாமுயற்சி திரைப்படத்தில் தற்பொழுது நடித்து வருகிறார். சமீபத்தில் திரிஷா நடிப்பில் உலக அளவில் பிரம்மாண்டமாக வெளிய பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் கிடைத்த பிரம்மாண்ட வெற்றியின் மூலமாக திரிஷா அடுத்தடுத்து பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். தற்பொழுது விடா முயற்சி படப் பிடிப்பிற்காக அஜர்பைஜானில் இருக்கும் நடிகை திரிஷா அதைத் தொடர்ந்து மலையாள படம் ஒன்றிலும் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். அந்த படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அதைத் தொடர்ந்து தெலுங்கில் மெகா ஸ்டார் சிரஞ்சீவியுடன் ஒரு படத்தில் இணைந்து நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்நிலையில் திரிஷாவின் சினிமா வாழ்க்கையில் மிக முக்கியமான திரைப்படம் சாமி. சமீபத்தில் சாமி படத்தின் இரண்டாவது பாகம் வெளியானது அதில் திரிஷா நடிக்கவில்லை இது குறித்த சுவாரஸ்யமான இந்த தகவலை பார்க்கலாம். நடிகை திரிஷா சமீபத்தில் தளபதி விஜய் உடன் இணைந்து நடித்த லியோ திரைப்படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்திருப்பார். அதேபோல் நடிகர் அஜித்துடன் இணைந்து என்னை அறிந்தால் படத்தில் நடிக்கும் பொழுது ஐந்து வயது பெண் குழந்தைக்கு அம்மாவாக நடித்திருந்தார். ஆனால் சாமி 2 படத்தில் மீண்டும் அப்பா விக்ரம் இருக்கு ஜோடியாக நடிப்பதற்கு நடிகர் திரிஷா மறுத்துள்ளார்.

தளபதி 68 படத்தின் ரிலீஸ் தேதியை முடிவு செய்த விஜய்! தளபதி ரசிகர்களுக்கான மாஸ் அப்டேட் இதோ!

அதற்கு காரணம் அந்த படத்தில் நடிகர் விக்ரம் மகனாகவும் நடித்திருப்பார் அவ்வளவு பெரிய மகனுக்கு அம்மாவாக நடிகை திரிஷா நடிக்க விரும்பவில்லை. மேலும் அந்த படக்குழு இந்த படத்தில் உங்களுக்கு வயதான கதாபாத்திரம் ஏதுமில்லை என்றும் பிளஷ்பேக் காட்சிகள் மட்டும் இரண்டு மூன்று உள்ளதாக கூறி திரிஷாவிடம் பேசி உள்ளது. அப்படி இருந்தும் திரிஷா அந்த படத்தில் நடிக்க மறுத்துள்ளார். மேலும் நடிகரின் விக்ரம் படங்கள் அந்த நேரத்தில் சுமாரான வெற்றியை பெற்றிருந்ததால் அவருடன் ஜோடி சேர நடிகை திரிஷா நடித்துள்ளதாகவும் சில சினிமா வட்டாரங்களில் தகவல்கள் கூறப்படுகிறது.

அதே நேரத்தில் முன்னணி நடிகர்களான விஜய் அஜித் படங்களில் மட்டும் அம்மா கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொள்ளும் திரிஷா விக்ரம் படத்தில் நடிக்க மறுத்தது ரசிகர்களிடையே மன கசப்பை ஏற்படுத்தினாலும் பொன்னின் செல்வன் திரைப்படத்தில் நடிகை விக்ரம் மற்றும் திரிஷா இணைந்து நடித்திருப்பது ரசிகர்களிடையே கொண்டாட்டத்தை ஏற்படுத்தி இருந்தது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.