வெற்றிலை காம்பை சாப்பிடக்கூடாது. ஏன் தெரியுமா?!

b0c991c4c3b84ced532767efee7d4072-1

வெற்றிலையின் காம்பை யார் தின்றாலும் அவர்களுக்கு ஞானம் வராது. ஏனென்றால்..

வெற்றிலையின் காம்பு பகுதியில் மூதேவி வாசம் செய்வதாய் ஐதீகம். யாரிடம் என்ன இருக்கிறதோ அதைத்தான் கொடுப்பார்கள். அந்த வகையில்பார்த்தால் மூதேவி சோம்பல், தூக்கம்மாதிரியான கெட்ட விசயத்தையே அளிப்பாள். எனவே வெற்றிலை உண்ண வேண்டுமாகின் காம்பை அடியோடு கிள்ளி எரிந்து விட்டு சாப்பிடவும், மேலும் முனை ஒடிந்த வெற்றிலை சாப்பிட்டாலும் பலன் இல்லை , காரணம் வெற்றிலை முனையில் ஸ்ரீதேவி குடிகொண்டிருப்பார், அவரை நீக்கி சாப்பிட்டால் செல்வ வளம் சேராது , பூஜைக்கு வெற்றிலை வைக்கும் போது முனை ஒடியாத அழகல் . சொத்தை இல்லாத ஓட்டை இல்லாத வெற்றிலையே படையலுக்கு சிறந்தது , வெற்றிலை கிழந்தோ. காய்ந்தோ இருந்தால் கூட படையலுக்கு உதவாது , வெற்றிலையின் ஒவ்வொரு பகுதியிலும் ஒரு தேவதை வாழ்கிறார்கள், எனவே வெற்றிலையின் எந்த பகுதி பாதிக்கப்பட்டிருந்தாலும் அந்த பாக தேவதை பாதிக்கப்படும், பின்பு அருள் கிடைக்காது, சாபம் தான் கிட்டும்.

அறிவியல்படி பார்த்தாலும், இலைகள் பெரும்பாலும் காம்பு பகுதியில்தான் அழுக ஆரம்பிக்கும். அழுகலை சாப்பிட்டா ஜீரணக்கோளாறு உண்டாகும். அதனால் உடல் ஆரோக்கியம் கெடக்கூடாதுன்னும் இப்படி சொல்வாங்க.

அதனால் கவனம் தேவை!

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews