மீனாவின் நெருங்கிய உறவினர்.. நடிப்பில் கலக்கிய நடிகைக்கு கிளாமர் ரோலில் அதிக வாய்ப்பு கொடுத்த தமிழ் சினிமா

ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித், மோகன்லால் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைத்து நடித்துள்ள நடிகை மீனா. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் தனது நடிப்பு திறனால் முன்னணி நடிகையாகவும் உயர்ந்த மீனா, தென் இந்தியாவில் உள்ள அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்துள்ளார்.

அவரின் நெருங்கிய உறவினரான ஒருவர் தான் நடிகை ராஜகோகிலா. இவர் பல படங்களில் கிளாமர் நடனமாடியுள்ளார். நடிகை ராஜ கோகிலா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் கடந்த 1970 களில் பிரபலமான நடிகையாகவும், கிளாமர் டான்ஸ் ஆடும் நடிகையாகவும் இருந்தார். இவர் மலையாளத்தில் கடந்த 1966 ஆம் ஆண்டு அறிமுகமாகி சின்ன சின்ன கேரக்டர் மற்றும் கிளாமர் டான்ஸ் ஆடும் கேரக்டர்களில் நடித்தார். கிளாமர் டான்ஸ் நடனத்திற்காகவே இயக்குனர்கள் இவரை அதிகம் பயன்படுத்திக் கொண்டனர்.

தமிழில் முதல் முறையாக சிவாஜி கணேசன் நடித்த ’மோட்டார் சுந்தரம் பிள்ளை’ என்ற திரைப்படத்தில் சாந்தி என்ற கேரக்டரில் அறிமுகமானார். அதன் பிறகு அவருக்கு ஒரு சில தமிழ் படங்களிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. 1968 ஆம் ஆண்டு ஜெமினி கணேசன் நடித்த ’சக்கரம்’ என்ற திரைப்படத்தில் ராஜகோகிலா நடித்தார்.

rajagokila1

ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் அவரை மீண்டும் பாடலுக்கு நடனமாடவே பயன்படுத்திக் கொண்டனர். எம்.ஜி.ஆர் நடித்த ’தேடிவந்த மாப்பிள்ளை’ என்ற திரைப்படத்தில் ராஜகோகிலா ஜெயலலிதாவின் தோழியாக நடித்திருப்பார். அந்த படத்தில் அவரது நடிப்பு சிறப்பாக இருக்கும்.

மீண்டும் எம்ஜிஆர் நடித்த ’ஒரு தாய் மக்கள்’ என்ற திரைப்படத்தில் நம்பியாரின் காதலியாக நடித்திருப்பார். ஜெய்சங்கர் நடித்த கௌபாய் பாணி திரைப்படமான ’கங்கா’ என்ற திரைப்படத்தில் கௌரி என்ற கேரக்டரில் நடித்திருந்தார் ராஜகோகிலா. நாயகியாக இருந்தாலும் கிளாமர் பாடல்களுக்கும் நடனமாடிருப்பார்

சீர்காழி கோவிந்தராஜன் நடித்த ‘அகத்தியர்’ என்ற திரைப்படத்தில் ராஜகோகிலா ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். அதன்பின்னர் ’மணிப்பயல்’ ’தாகம்’ ’எங்க பாட்டன் சொத்து ’உள்பட ஒரு சில தமிழ் படங்களிலும், பல மலையாள படங்களிலும் நடித்திருந்தார். ஜெய்சங்கர் மற்றும் சிவக்குமார் இணைந்து நடித்த எங்க பாட்டன் சொத்து என்ற திரைப்படத்தில் அவர் கிளாமர் கலந்து சிறப்பாக நடித்திருந்ததாக பலரும் குறிப்பிட்டிருந்தனர்.

நடிகை மீனாவின் நெருங்கிய உறவினரான நடிகை ராஜகோகிலா, கிராஸ் பெல்ட் மணி என்பவரை திருமணம் செய்து கொண்டார். கிராஸ் பெல்ட் மணி என்பவர் மலையாள திரை உலகில் பிரபல இயக்குனராகவும், நடன இயக்குனராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 1970 ஆம் ஆண்டு இவர் ’கிராஸ் பெல்ட்’ என்ற திரைப்படத்தை இயக்கிய பின்னர் அவருக்கு கிராஸ் பெல்ட் மணி என்ற பெயர் நிலையானது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.