இளம் வயதில் கங்கை அமரன் எப்படி இருக்காரு பாருங்க?.. வெங்கட் பிரபு போட்ட ஹேப்பி பர்த்டே அப்பா போஸ்ட்!

இசைஞானி இளையராஜாவின் சகோதரரும் இசையமைப்பாளருமான கங்கை அமரன் இன்று தனது 76வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். 1947ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்த ஆண்டு டிசம்பர் 8ம் தேதி பண்ணைபுரத்தில் பிறந்தவர் கங்கை அமரன்.

கங்கை அமரனின் மகன்களான வெங்கட் பிரபு மற்றும் பிரேம்ஜியும் சினிமாவில் பெரியளவில் தங்களுக்கான பெயரையும் புகழையும் சம்பாதித்து வருகின்றனர்.

கங்கை அமரன் பிறந்தநாள்

இயக்குநராக மாறியுள்ள வெங்கட் பிரபு அஜித், சூர்யா, சிம்புவை தொடர்ந்து தற்போது நடிகர் விஜய்யையும் இயக்கும் அளவுக்கு தனது துறையில் பெரும் முயற்சி செய்து முன்னேறி வருகிறார். தனது படங்களில் தனது தம்பியான பிரேம்ஜிக்கும் வாய்ப்புகளை வழங்கி அவரையும் தொடர்ந்து நடிகராக்கி வருகிறார். தனிப்பட்ட முறையில் பிரேம்ஜி இசையமைப்பாளராகவும், பாடகராகவும் அசத்தி வருகிறார்.

இளையராஜா இசைத்துறையில் பெரிய பெரிய சாதனைகளை செய்த நிலையில், அவரது சகோதரரான கங்கை அமரனும் இளையராஜாவுக்கு பக்க துணையாக பல ஆண்டுகள் அவருடன் இணைந்து பணியாற்றி உள்ளார். தனியாகவும் சில படங்களுக்கு இசையமைத்துள்ள அவர், நடிகராகவும் சில படங்களில் தலைகாட்டியுள்ளார். பல படங்களை இயக்கி ஹிட் கொடுத்திருக்கிறார் கங்கை அமரன்.

1982ம் ஆண்டு கோழி கூவுது படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமாகனார் கங்கை அமரன். கொக்கரக்கோ, தேவி ஸ்ரீதேவி, வெள்ளை புறா ஒன்று, எங்க ஊரு பாட்டுக்காரன் என பல படங்களை இயக்கிய இவர், 1989ம் ஆண்டு இயக்கிய கரகாட்டக்காரன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக மாறியது.

வெங்கட் பிரபு வாழ்த்து

இன்றும் அந்த படத்திற்கு என்றும் அதில் இடம்பெற்ற பாடல் காட்சிகள், நகைச்சுவை காட்சிகளுக்கு என தனி ரசிகர் பட்டாளமே இருப்பது குறிப்பிடத்தக்கது. இசையமைப்பாளராகவும், பாடகராகவும் பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ள கங்கை அமரன் 16 வயதினிலே படத்தில் இடம்பெற்ற செந்தூரப்பூவே பாடலை எழுதி பாடலாசிரியராகவும் மாறினார். அதன் பின்னர் அதே போன்று இளையராஜா இசையில் வெளியான பல சூப்பர் ஹிட் பாடல்களுக்கும் பாடல் வரிகளை எழுதி உள்ளார். இவர் தான் அந்த பாடல்களை எழுதினார் என்பதே பலருக்கும் தெரியாதது தான் இதில் வேடிக்கையான ஒன்று.

இந்நிலையில், 76வது பிறந்தநாளை கொண்டாடி வரும் அப்பா கங்கை அமரனுக்கு வெங்கட் பிரபு ட்விட்டர் பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். அத்துடன் இளம் வயதில் குழந்தைகளாக இருக்கும் வெங்கட் பிரபுவையும் பிரேம்ஜியையும் கங்கை அமரன் தூக்கி நிற்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.