சூர்யாவின் அயன் படத்தை காப்பி செய்யும் வெங்கட் பிரபு.. தளபதி 68 படத்தில் இப்படி ஒரு காட்சியா?

தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படம் இன்று உலக அளவில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பான் இந்தியா திரைப்படமாக வெளியாகி உள்ள லியோ திரைப்படத்தில் பல பிரம்மாண்ட நடிகர்கள், இயக்குனர்கள் இணைந்து நடித்துள்ளனர். முதல் நாளே லியோ திரைப்படம் பெருமளவில் வசூல் சாதனை செய்து மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளது.

தற்போது லியோவை தொடர்ந்து தளபதி விஜய் நடிக்கும் தளபதி 68 படத்தின் அப்டேட்கள் அடுத்தடுத்து வர துவங்கியுள்ளது. இந்த படத்தின் பூஜை கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற நிலையில் படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வெங்கட் பிரபு இயக்கம் இந்த படத்தில் தளபதி விஜய் இரட்டை கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

இந்தப் படத்தில் கதாநாயகிகளாக பிரியங்கா மோகன் மற்றும் சினேகா நடிக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும் இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் மைக் மோகன் இணைந்துள்ளார். 90களில் முன்னணி ஹீரோவாக வலம் வந்த மைக் மோகன் இந்த படத்தில் வில்லனாக நடிக்க இருப்பதால், அவருக்கு இரண்டு கோடி சம்பளம் வரை பேசி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதைத் தொடர்ந்து இந்த படத்தில் விஜய்யின் நண்பராக முன்னணி நடிகர் பிரசாந்த் நடிக்க உள்ளார். மேலும் பிரசாந்த் இந்த படத்தில் ஜீன்ஸ் படத்தில் இருப்பது போல 25 வயது உடைய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இதனால் விஜய்க்கு இணை ஆக இந்த படத்தில் பிரசாந்த் அவர்களுக்கும் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இளமையான பிரசாந்தை இந்த படத்தில் பார்க்க முடியும்.

மேலும் இந்த படத்தின் ஒரு சிறப்பாக விஜய், அஜ்மல், பிரபுதேவா, பிரசாந்த் என இவர்கள் நான்கு பெரும் இணைந்து நடனமாடும் ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட்டுள்ளது. இந்தப் பாடல் காட்சிக்கு நடன இயக்குனர் ராஜசுந்தரம் மாஸ்டர் அவர்கள் கோரியோகிராப் செய்துள்ளார். இந்த பாடல் காட்சியின் படப்பிடிப்புகள் சென்னையில் நடந்து முடிந்துள்ளது.

விடாமுயற்சி படத்தில் திரிஷாவுக்கும் போட்டியாக களமிறங்கும் அடுத்தடுத்த இரண்டு ஹீரோயின்கள்!

அதைத் தொடர்ந்து படத்தின் இரண்டாம் ஷெட்யுல் தொடங்குவதற்கு முன் சிறு இடைவெளி விடப்பட்டுள்ளது. இந்த படத்தின் இரண்டாவது ஷெட்யூல் வெளிநாடுகளில் அதாவது சவுத் ஆப்பிரிக்காவில் நடக்க உள்ளதாகவும் நடக்க உள்ளதாகவும் அங்கு பாடல் காட்சியை தொடர்ந்து இரண்டு சண்டை காட்சிகள் படமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த சண்டை காட்சிகள் மைக் மோகன் மற்றும் விஜய் அவர்களுடைய உள்ள மோதலை வெளிக்காட்டுவதாக அமைய உள்ளது. மேலும் இதுபோன்ற சண்டைக் காட்சி சூர்யா நடித்த அயன் திரைப்படத்தில் இடம் பெற்றிருக்கும். இதுவரை அல்லாத விஜய்யின் வித்தியாசமான ஆக்சன் திரைப்படம் ஆக இந்த தளபதி 68 படம் இருக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.