பொழுதுபோக்கு

3 மணி நேர படமாக இருந்தாலும் காட்சிக்குக் காட்சி ரசனையை வாரி வழங்கிய வாரணம் ஆயிரம்

2008ம் ஆண்டு தமிழ்த்திரை உலகில் மிக மிக வித்தியாசமான அழகான காதல் படம் வெளியானது. வாழ்க்கையை முழுமையாக ரசித்து அனுபவிக்க ஒவ்வொரு நொடியையும் பயனுள்ளதாக்கும் வகையில் இது ஒரு அற்புதமான படைப்பு. கௌதம் வாசுதேவ் மேனன் படத்தை சிற்பம் போல காட்சிக்குக் காட்சி செதுக்கியிருந்தார்.

180 நிமிடம் அதாவது 3 மணி நேரம்… ரன்னிங் டைம் என்றாலும் படம் போவதே தெரியவில்லை. அப்படி ஒரு ஆத்மார்த்தமான ரசனையைத் தந்தது இந்தப் படம். தலைப்பே திரையரங்கிற்கு நம்மை ஈர்த்து வரவழைத்தது. வாரணம் ஆயிரம் என்ற இந்தப்படம் தனித்தன்மை வாய்ந்தது.

நம்பிக்கை நட்சத்திரம்

கோலிவுட்டில் சூர்யா ரசிகர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்து வந்தார். அவரது காக்க காக்க, மாயாவி படங்கள் தான் கொஞ்சம் சுமார் ரகங்கள். மற்ற எல்லா படங்களும் அதாவது கஜினி, வேல் மற்றும் பிதாமகன் ஆகியவை நல்ல லாபத்தைக் கொடுத்தன.

Surya

கோலிவுட் ஷங்கருக்கு அடுத்தபடியாக கௌதம் வாசுதேவ் மேனன் இயக்குனரை அதிகம் தேடியது. அப்போது மணிரத்னம் மற்றும் கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் அரை ஓய்வு பெற்றவர்களாகக் கருதப்பட்டனர். ஏ.ஆர். முருகதாஸ் 3வது இடத்தில் இருந்தார். ஹரி 4வது இடத்திலும், லிங்குசாமி 5வது இடத்திலும் இருந்தார்.

கோலிவுட்டில் ஏ.ஆர். ரஹ்மானுக்குப் பிறகு இரண்டாவது பெரிய இசை அமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ். அந்த நேரத்தில் ஒரு சரியான நடிகர், ஒரு இயக்குனர் மற்றும் ஒரு இசை அமைப்பாளர் என வாரணம் ஆயிரம் படத்துக்கு அமைந்தது. படமும் சரியான நேரத்தில் வெளியிடப்பட்டது. இதுவே படத்தின் வெற்றிக்கும் வித்திட்டது.

பயோபிக்ஸ்

Varanam Aayiram

ரசிகர்களின் ரசனை மாறிவரும் நேரத்தில் இந்தப் படம் அவர்களுக்கு ஒரு பெருந்தீனியைக் கொடுத்தது.
கற்பனையான பயோபிக்ஸ் சூப்பராக இருந்தது. அப்போது ரசிகர்கள் 1960களின் த்ரோபேக் மற்றும் கதை மற்றும் அதை விவரிப்பதை ஆர்வமாகப் பார்த்தார்கள்.

படம் சிக்கலான கதை அம்சத்தைக் கொண்டதாக இருந்தாலும் திரைக்கதை மிகவும் நேர்த்தியாகக் கட்டமைக்கப்பட்டு இருந்தது. படத்தின் கடத்தல் காட்சிகளும் நியாயமான முறையில் கட்டமைக்கப்பட்டு இருந்தது. சூர்யா ரொம்பவே அருமையான நடிப்பை வெளிப்படுத்தினார். இது ரசிகனைத் திருப்திப்படுத்தியது.

படத்தில் சிம்ரனின் கடைசி டயலாக் இது தான். உங்க அப்பா ஒண்ணுமே செய்யல. நீங்க தான் உண்மையான ஹீரோ என்று கூறியது படத்தைத் தூக்கி நிறுத்தியது.

வசூலில் சாதனை

Varanam Aayiram 2

நவம்பர் 14ம் தேதி வெளியான இப்படம், வசூலில் வாரந்தோறும் அர்ஜுன் நடித்த திருவண்ணாமலையின் சாதனையை முறியடித்து. கடைசியாக அபியும் நானும் வார இறுதி வசூலை முந்தியது. அதுமட்டுமல்லாமல் இந்தப்படம் 2008 ஆம் ஆண்டு சென்னையில் அதிக வசூல் செய்த திரைப்படமாக தசாவதாரத்தின் ரூ.5.28 கோடியை முறியடித்து. இந்தப் படத்தின் வசூல் ரூ.5.91 கோடி.

இது 2008ல் தமிழகத்தில் தசாவதாரத்துக்குப் பிறகு அதிக வசூலை ஈட்டியதும் இந்தப் படம் தான். இதன் வசூல் ரூ.52.57 கோடி.

Published by
Sankar

Recent Posts