வரலட்சுமியுடன் பிரபல நடிகை இணையும் படம்


dead688ee010b28075ee4efb89e920d0

கோலிவுட் திரையுலகில் ஒரே நேரத்தில் 6 படங்களில் நடித்து வரும் வரலட்சுமி சரத்குமார் தற்போது மீண்டும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படத்தில் அவருடன் பிரபல நடிகை இனியா நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

ராம் குமார் என்பவர் இயக்குனராக அறிமுகமாகும் இந்தப் படத்திற்கு ’கலர்ஸ்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. நான் கடவுள் ராஜேந்திரன் உள்பட பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளனர்

எஸ்பி வெங்கடேஷ் என்பவர் இந்த படத்திற்கு இசையமைக்க உள்ளார். இவர் ஏற்கனவே கடந்த சில வருடங்களுக்கு முன் தமிழ் திரையுலகில் பல படங்களுக்கு இசையமைத்த இருந்தாலும் தற்போது மலையாளத்தில் இவர் புகழ்பெற்ற இசை அமைப்பாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

அதிரடி ஆக்ஷன் கதையம்சம் கொண்ட இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.