குட்டி மந்திரவாதிகள் கொட்டம் அடக்கும் வராஹி மாலை

57eb4941c541dfe5432879b912010a85-1

தமிழ்நாட்டிலும் இலங்கையிலும் ஒவ்வொரு ஊரிலும் குறைந்தது 10 முதல் 50 குட்டி மந்திரவாதிகள் வாழ்ந்து வருகிறார்கள் .

இவர்கள் யாரும் தன்னை மந்திரவாதி என்று வெளியே காட்டிக் கொள்வது கிடையாது .

ஜோதிடம் பார்ப்பது அல்லது அருள்வாக்கு சொல்வது அல்லது குறி சொல்வது குறி சொல்வது போன்ற முகமூடி அணிந்துகொண்டு வாழ்ந்து வருகிறார்கள்.

மாந்திரீகம் என்றால் அஷ்டகர்மம் என்று பெயர் .

அஷ்ட கர்மம் என்றால் வசியம், மோகனம், ஸ்தம்பனம், ஆகர்ஷனம், வித்துவேடணம், பேதனம், மாரணம் என்று எட்டுவதற்கு செயல்களை மாந்திரீகம் என்று கூறுவார்கள்.

இதில் யார் வேண்டுமானாலும் வசியம் மற்றும் ஸ்தம்பணத்தை கற்றுக் கொள்ளலாம்.

இதைக் கற்றுக்கொண்டு திறமையான வாய்ஜாலம் உள்ள மனிதர்களுக்கு பணத்தை வாரியிறைத்து அல்லது மாத சம்பளம் கொடுத்து பொதுமக்களிடம் பிரச்சினையைத் தீர்த்து வைப்பதாக மார்க்கெட்டிங் செய்கிறார்கள்.

தேடி வருபவர்களின் பின்னணி பொருளாதார வசதி போன்றவைகளை ஆராய்ச்சி செய்து அதன் பிறகு அவர்களிடம் பணம் படிப்படியாக பிடுங்குகிறார்கள் .

ஆனால் கொடுக்கும் பணத்திற்கு தகுந்தாற்போல பிரச்சனையை தீர்ப்பது கிடையாது.

சாதாரண அப்பாவி மக்களுக்கு கடைசி நம்பிக்கை கோயில்களும் ஆன்மீகமும் தான் .ஆன்மீகத்தின் ஆதார தூண் ஜோதிடமும் அருள்வாக்கு சொல்வதும் தான்!

அந்த ஆன்மீகத்தின் மீதான கொஞ்சநஞ்ச நம்பிக்கையை சீரழிக்கும் வேலையை இந்த குட்டி மந்திரவாதிகள் செய்து விடுகிறார்கள் .

எனவே தான் யார் என்ன சொன்னாலும் எந்த ஒரு தெய்வீக ரகசியங்களை போதித்தாலும் அதை நம்புவது கிடையாது .

கலியுகத்தில் இப்படியெல்லாம் நடைபெறும் என்று தெரிந்துதான் சித்தர் பெருமக்கள் நமக்கு வாராகி ஜெப முறையை நமக்கு உபதேசம் செய்து உள்ளார்கள் .

தினமும் இரவில் தூங்கச் செல்லும் முன்பாக ஒருமுறை வராகிமாலை என்ற பாடலை ஜெபம் செய்ய வேண்டும்.

மிகுந்த பிரச்சினைகள்

அல்லது

தீராத பிரச்சினைகள்

அல்லது

ஏராளமான மன வேதனைகள் உள்ளவர்கள்

அதிலிருந்து மீள்வதற்கு முதலில் அசைவ உணவு சாப்பிடும் பழக்கத்தை இன்று முதல் கைவிடவேண்டும்.

மது அருந்தும் பழக்கத்தை இன்றுமுதல் கைவிட வேண்டும் .

இந்த இரண்டு பழக்கத்தையும் கைவிடாமல் இருப்பவர்களுக்கு ஒரு நாளும் வராகி அன்னையின் அனுக்கிரகம் கிடைக்காது.

இந்த இரண்டு கெட்ட பழக்கத்தை அது கைவிட்டு வராகிமாலை ஜெபம் செய்து வருகிறார்களோ அவர்களுக்கு அன்னையின் அனுக்கிரகம் வெகு சீக்கிரம் கிடைக்கும்.

தினமும் இரவில் வராகி மாலை என்ற 32 பாடல் தொகுப்பை ஐந்து முறை ஜெபிக்கவேண்டும் .

ஒருநாளுக்கு வராகி மாலை ஐந்து முறை வீதம் 90 நாட்கள் ஜெபிக்கவேண்டும்.

பெரும்பாலான சாதாரண மக்களுக்கு வராகிமாலை ஜபம் 90 நாட்களில் எப்பேர்பட்ட பிரச்சினையாக இருந்தாலும் தீர்த்து வைத்து விடும் .

சிலருக்கு 90 நாட்கள் ஆனபிறகும் கூட பிரச்சனைகள் தீராமல் இருக்கும்.

அவர்கள் போன நான்கு பிறவிகள் பிறவிகளில் செய்த பாவங்கள் மட்டுமல்லாமல் பல ஆயிரக்கணக்கான பிறவிகளில் செய்த கர்ம வினையை இந்த ஒரே பிறவியில் அனுபவித்து விடுகிறேன் என்று சங்கல்பம் செய்து விட்டு பிறந்து இருப்பார்கள்.

அதை 8 வது வயதில் இருந்தே மறந்து இருப்பார்கள்.

அப்படி பட்டவர்கள் ஒரு நாளுக்கு 5 முறை வீதம் 450 நாட்களுக்கு வாராகி மாலை ஜெபம் செய்து முடிக்க வேண்டும்.

அப்படி முடித்து விட்டால் எப்பேர்ப்பட்ட சோகமாக இருந்தாலும் வராஹி அன்னையின் அருளால் தீர்ந்து விடும்.

வாராகி மாலை ஜெபம் செய்வதை ரகசியமாக செய்து வர வேண்டும்.வீட்டில் இருப்பவர்களுக்கு தெரிவிக்கலாம்.

பெண்கள் மாத விலக்கு நாட்களில் ஜெபிக்க கூடாது.

அன்னை மஹா வாராகி யின் அருளை பெற முயற்சி செய்ய வேண்டும்.தினமும் 5 முறை இரவில் வாராகி மாலை ஜெபம் செய்து வர வேண்டும்.இப்படி 450 நாட்கள் ஜெபித்து முடித்து விட்டால் எப்பேர்ப்பட்ட மாந்திரீக தாக்குதலாக இருந்தாலும் அதை ஒழித்து கட்டி ஜெபம் செய்தவரை காப்பாற்றி விடுவாள் வாராகி அன்னை!!

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.