அடுத்த திருமணம் எப்போது என்று ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு வனிதா விஜயகுமாரின் பதில்… ஒரு வேளை இருக்குமோ…?

மூத்த நடிகர் விஜயகுமார் மற்றும் நடிகை மஞ்சுளா ஆகியோரின் மகள்களில் ஒருவர் தான் வனிதா விஜயகுமார். 1995 ஆம் ஆண்டு ‘சந்திரலேகா’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். அதன் பின் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தார் வனிதா.

2019 ஆம் ஆண்டு விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன் மூன்றில் போட்டியாளராக பங்கேற்றார். தனது பேச்சால் யாரையும் சரமாரியாக விளாசும் தன்மைக்கு கொண்டவர். அதனால் அந்த சீசன் வனிதா விஜயகுமாரல் பரபரப்பாக போனது. ஒரு கட்டத்தில் எலிமினேட் ஆகிவிட்டார். வனிதா விஜயகுமார் எலிமினேட் ஆகி போனவுடன் பிக் பாஸ் சீசன் மூன்று விறுவிறுப்பு இல்லாமல் போனது. அதனால் அவரை மறுபடியும் வைல்டுகார்ட் போட்டியாளராக கொண்டு வந்து அந்த சீசனை முடித்தனர்.

அதற்கு அடுத்ததாக நடைபெற்ற குக் வித் கோமாளி முதல் சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ஏற்கனவே சமையல் கலையை கற்றிருந்த வனிதா விஜயகுமார் அந்த நிகழ்ச்சியின் வெற்றியாளர் ஆனார். பின்பு பல விஜய் டிவி ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

வனிதா விஜயகுமார் என்றாலே சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் தான். ஏற்கனவே இரண்டு திருமணங்கள் செய்து விவாகரத்து ஆனவர் வனிதா விஜயகுமார். அதற்குப் பின்பு ராபர்ட் மாஸ்டருடன் ரிலேஷன்ஷிபில் இருப்பதாக செய்திகள் வந்தன. அதற்கு அடுத்து 2020 ஆம் ஆண்டு வனிதா விஜயகுமார் பீட்டர் பால் என்பவரை தனது வீட்டில் வைத்து கிறிஸ்துவ முறைப்படி மணந்து கொண்டார்.

இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. பீட்டர் பாலின் முதல் மனைவி என்னை விவாகரத்து செய்யாமல் பீட்டர் பால் வனிதாவை மணந்து கொண்டார் என்று நியாயம் கேட்டு மீடியாவிற்கு வந்தார். அதீத குடிப்பழக்கம் உள்ள பீட்டர் பாலை 6 மாதத்திற்குள் பிரிந்துவிட்டார். பின்பு பீட்டர் பால் குடிப்பழக்கத்தினால் உயிரிழந்தார்.

இந்நிலையில் இன்ஸ்டாவில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளிக்கிறேன் என்று பதிவிட்டிருந்தார். அதில் ஒரு ரசிகர் அடுத்ததாக எப்போது திருமணம் செய்து கொள்ள போகிறீர்கள் என்று கேட்டிருந்தார். அதற்கு வனிதா விஜயகுமார் எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்று பதிலளித்து இருந்தார். இதனால் வனிதா விஜயகுமார் மறுபடியும் திருமணம் செய்து கொள்ள போகிறாரா என்று குழப்பத்தில் இணையவாசிகள் உள்ளனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...