விஜயகுமார் பேத்திக்கு திருமணம்!.. வனிதாவை யாருமே கண்டுக்கல.. என்ன போஸ்ட் போட்டுருக்காரு தெரியுமா?

நடிகர் விஜயகுமாரின் பேத்தி தியாவின் திருமணத்தை முன்னிட்டு ஒட்டு மொத்த குடும்பத்தோடு கோலாகலமாக கொண்டாடி வருகின்ற வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றன. இந்நிலையில் அதே குடும்பத்தை சேர்ந்த வனிதா விஜயகுமாரை திருமணதிற்கு அழைக்கவில்லை என பதிவிட்டிருக்கிறார்.

நடிகர் விஜயகுமார் மற்றும் அவரது முதல் மனைவி முத்துக்கண்ணுக்கும் பிறந்தவர்கள், அனிதா, கவிதா மற்றும் அருண் விஜய் ஆவர். விஜயகுமார் மற்றும் அவரது இரண்டாம் மனைவி மஞ்சுளாவின் மூன்று மகள்கள் வனிதா, ப்ரீதா, மற்றும் ஸ்ரீதேவி ஆவர்.

vanitha

விஜயகுமார் பேத்தி திருமணம்:

விஜயகுமார் தனது மகன் அருண் விஜயுடன் இணைந்து பாண்டவர் பூமி, மாஞ்சா வேலு, குற்றம் 23 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மகள்களான வனிதா, ப்ரீதா, ஸ்ரீதேவி ஆகியோரும் பல படங்களில் ந்டித்துள்ளனர்.

விஜயகுமார் மற்றும் முத்துக்கண்ணு அவர்களின் மகளான அனிதாவின் மகள் தியாவின் திருமணம் நாளை மகாபலிபுரத்தில் நடைபெற உள்ளது. அதை தொடர்ந்து நேற்று அனிதா விஜயகுமார் வீட்டில் பந்தகால் நடுவது, சங்கீத் மற்றும் மெஹந்தி போன்ற நிகழ்சிகள் கோலாகலமாக நடைபெற்று வந்தது. அந்நிகழ்சியில் விஜயகுமார் அவரது மனைவி முத்துக்கண்ணு, அனிதா, கவிதா விஜயகுமார், அருண் விஜய், ப்ரீத்தா, ஸ்ரீதேவி என குடும்பத்தோடு கலந்து கொண்டாடி வரும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

மணமக்களை ஆரத்தி எடுத்து வீட்டிற்க்குள் வரவேற்பது, மெஹந்தி ஃபங்ஸனில் விஜயகுமார் அவரது மனைவி மெஹந்தி போட்டுக்கொள்வதை இந்த வயதிலும் ரசித்து பார்ப்பது. ப்ரீத்தா, ஸ்ரீதேவி உள்ளிட்டோர் மெஹந்தி போட்டுக்கொள்வது, மணமக்களின் புகைப்படங்கள் எடுப்பது, நலங்கு வைப்பது போன்ற பல வீடியோக்கள் மற்றும் அவர்களின் ஒட்டு மொத்த குடும்பத்துடன் எடுத்துகொண்ட புகைப்படங்களும் வைரலாகி வருகின்றன.

வனிதா விஜயகுமார் போட்ட போஸ்ட்:

விஜயகுமார் மற்றும் மஞ்சுளாவின் முதல் மகளான வனிதா விஜயகுமார் விஜய் நடிப்பில் வெளியான சந்திரலேகா திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அதை தொடர்ந்து சில படங்கள் நடித்த அவர் திருமணமாகி சினிமாவை விட்டு விலகியிருந்தார். திருமண வாழ்க்கையில் இருந்த கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து தொடர்ந்து இரண்டு திருமணம் செய்தும் தற்போது தன் மகளுடன் தனியாக வாழ்ந்து வருகிறார் . வனிதாவிற்கு ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்களும் உள்ளனர்.

தனது மகனுக்காக தன் தந்தையுடன் நடந்த பிரச்சனையால் குடும்பததை விட்டு பிரிந்து இருக்கிறார். மேலும் பிக் பாஸ் நிகழ்சியில் கலந்து கொண்டு பிரபலமானார். அதை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியை பற்றி பேசி பல விமர்சனங்களுக்கு ஆளானார்.
தற்போது தியாவின் திருமணத்திற்கு வனிதாவை அழைக்காததால் தனது இன்ஸ்டாகிராமில்,சிங்கம் தனியாக நடந்து வருவதை போட்டு, ஒட்டுமொத்த கூட்டமும் ஒரே இடத்தில் இருக்கும் போது, சிங்கம் போல் தனியாக இருந்தால், நீங்கள் எவ்வளவு பவர்ஃபுல் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews