பெரிய பொண்ணு பிக்பாஸ்ல.. சின்ன பொண்ணுடன் வனிதா விஜயகுமார் எங்க இருக்காரு பாருங்க?

பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் நடிகை வனிதா விஜய்குமாரின் மகள் ஜோவிகா போட்டியாளராக பங்கேற்று வருகிறார். வனிதா விஜயகுமாரை விட டபுள் மடங்கு பாப்புலர் ஆகிவிடுவார் போல ஜோவிகா விஜயகுமார் என்று தான் தெரிகிறது.

யாரையும் வச்சு பார்க்காமல் டேய் போட்டு பேசுவதும், விசித்ரா உள்ளிட்ட வயதானவர்களை ஏய் போட்டு பேசுவதுமாக நிகழ்ச்சியில் ராங்கித்தனம் காட்டி வருகிறார். முதல் வாரத்தில் விசித்ராவுக்கும் ஜோவிகாவுக்கும் இடையே நடைபெற்ற கல்வி குறித்த வாக்குவாதம் அவருக்கு ஏகப்பட்ட 2கே கிட்ஸ் ரசிகர்களை ஈர்த்து கொடுத்தது.

பிக் பாஸ் வீட்டில் சண்டை போடும் ஜோவிகா:

ஆனால், சமீப காலமாக தொடர்ந்து மற்றவர்களுடன் சண்டை போடுவதையே விளையாட்டாக விளையாடி வருவதால் ஜோவிகாவுக்கு ரசிகர்கள் அதிரடியாக குறைந்து ஹேட்டர்கள் அதிகரித்து வருகின்றனர். ஜோவிகா தொடர்பான மீம் மற்றும் படிக்காத முட்டாளாக ஜோவிகா எப்படி பிக் பாஸ் வீட்டில் நடந்து கொள்கிறார் என ஏகப்பட்ட கமெண்ட்டுகளை பதிவிட்டு அவரை காலி செய்து வருகின்றனர்.

இந்நிலையில், தனது இளைய மகளுடன் வனிதா விஜயகுமார் சினிமா சூட்டிங்கிற்கு எல்லாம் பிரேக் விட்டு விட்டு தாய்லாந்து, பேங்காக் என ஜாலி டூர் அடித்து வருகிறார். அங்கிருந்த படியே தினமும் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்து அது தொடர்பான விமர்சனங்களை கொடுத்து தனது மகளுக்கு ஆதரவாக பேசி வருகிறார்.

பேங்காக்கில் இளைய மகளுடன் வனிதா:

தாய்லாந்தில் இளைய மகளுடன் ஷாப்பிங் செய்யும் புகைப்படங்களையும் உணவு அருந்தும் போட்டோக்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.

வனிதா விஜயகுமார் போட்டோவுக்கு லைக் போட்டு வரும் ரசிகர்கள், ஜோவிகாவின் கேம் படு மோசமாக மாறிக் கொண்டிருக்கிறது என கழுவி ஊற்றி வருகின்றனர். இளைய மகள் ஜெயனிதாவை பார்த்த ரசிகர்கள் பிக் பாஸ் சீசன் 10க்கு போட்டியாளர் ரெடியாகிட்டு வராங்க என கமெண்ட் போட்டு வருகின்றனர்.

ஒட்டுமொத்த குடும்பத்தையும் பிக் பாஸ் குடும்பமாக மாற்றாமல் விட மாட்டார் போல வனிதா விஜயகுமார் என்றும் தனது இரு மகளையும் எப்படியாவது சினிமாவுக்குள் கொண்டு செல்ல பெரும் போராட்டத்தை நடத்தி வருகிறார் என்றூம் கூறுகின்றனர்.

அடுத்த பிக் பாஸ் போட்டியாளர் ரெடி:

ஏற்கனவே ஜோவிகா தமிழ் மற்றும் தெலுங்கில் தலா ஒரு படத்தில் கமிட் ஆகி விட்டுத் தான் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கே வந்திருக்கிறார் என்றும் வெளியே போனதும் ஹீரோயின் தான் என வனிதா விஜயகுமாரே ஏற்கனவே அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

வனிதாவை விட உயரமாக இரண்டாவது மகள் ஜெயனிதாவும் மளமளவென வளர்ந்துள்ளதை பார்த்த ரசிகர்கள் ஜோவிகாவை போல இவரும் பிக் பாஸ் வீட்டுக்கு சென்று சண்டை போடுவாரா? என்றும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews