13 வயதில் படிப்பை நிறுத்தி சினிமாவுக்கு வந்த நடிகை.. ஆனாலும் நடுவில் நடந்த பரபர சம்பவம்

குழந்தை நட்சத்திரமாக சிறு வயதிலேயே நடிக்க வந்து, சினிமாவில் முன்னணி பிரபலமாகவும் உயர்ந்தவர்கள் பலர் உள்ளனர். அந்த வகையில் முக்கியமான ஒரு நடிகை தான் வனிதா கிருஷ்ணசந்திரன். இவர் தமிழ்நாட்டில் உள்ள திருச்சியை சேர்ந்தவர். இவருடைய அப்பா கேரளாவை சேர்ந்தவராக இருந்தாலும் அம்மா திருச்சியை சேர்ந்தவர் என்பதால் திருச்சியில் அவரது குடும்பம் செட்டில் ஆகிவிட்டது. திருச்சியில் அவர் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போதே சினிமா வாய்ப்பு வந்ததால் 13 வயதிலேயே அவர் தனது படிப்பை நிறுத்திவிட்டார்.

13 வயதில் இவர் ’பாதை மாறினால்’ என்ற திரைப்படத்தில் நடித்தார். அதன் பிறகு அடுக்குமல்லி, சுஜாதா, நெஞ்சத்தை கிள்ளாதே போன்ற படங்களில் சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்தார். அதன் பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து அவருக்கு நாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. குறிப்பாக ’அஞ்சாத நெஞ்சங்கள்’ போன்ற படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்த அவர் அதன் பிறகு கிடைக்கும் கேரக்டர் எல்லாம் நடிக்க தொடங்கினார்.

vanitha1

குறிப்பாக கீழ்வானம் சிவக்கும், நண்டு, கழுகு, சிம்லா ஸ்பெஷல், ஆயிரம் முத்தங்கள், கண்ணே ராதா உள்பட பல படங்களில் நடித்தார். கடந்த 1986 ஆம் ஆண்டு அஞ்சாத சிங்கம் என்ற படத்தில் நடித்த பிறகு அவர் திடீரென திரைப்படத்திலிருந்து விலகினார். ஆனால்  சில ஆண்டுகள் கழித்து மீண்டும் அதாவது 2003 ஆம் ஆண்டு ’ஸ்டூடண்ட் நம்பர் ஒன்’ என்ற திரைப்படத்தின் மூலம் அம்மா கேரக்டரில் அறிமுகமானார். இந்த படத்தில் அவர் சிபியின் அம்மாவாக நடித்திருப்பார்.

அதன் பிறகு அவர் பல திரைப்படங்களில் அம்மா கேரக்டரில் நடித்தார். கடைசியாக அவர் 2016 ஆம் ஆண்டு வெளியான ’மாப்பிள்ளை சிங்கம்’ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். தமிழ் மட்டும் இன்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளிலும் நடித்துள்ளார். இதனையடுத்து அவர் ஒரு கட்டத்தில் சின்ன திரையில் கவனம் செலுத்த தொடங்கினார்.

சன் டிவியில் ஒளிபரப்பான அலைகள், கோலங்கள், அல்லி ராஜ்யம், மாதவி போன்ற தொடர்களிலும் ஜெயா டிவியில் எங்கிருந்தோ வந்தாள், ஜீ தமிழில் முள்ளும் மலரும் போன்ற சீரியல்களிலும் நடித்தார். மலையாளத்திலும் பல சீரியல்களில் அவர் நடித்துள்ளார்.

vanitha12

கடந்த 1986 ஆம் ஆண்டு, பாடகர் மற்றும் நடிகர் கிருஷ்ணசந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்ட வனிதா, திருமணத்திற்கு பின்னர் சில ஆண்டுகள் இடைவெளி விட்டாலும் அதன் பிறகு மீண்டும் அவர் நடித்து வருகிறார். தற்போது கூட அவர் மலையாளத்தில்  ஒரு தொலைக்காட்சி தொடரில் டீச்சர் வேடத்தில் நடித்து வருகிறார்.

மிகச்சிறந்த குணச்சித்திர நடிகையாக தமிழ் மற்றும் மலையாள திரை உலகில் நடித்து வரும் வனிதாவுக்கு இன்னும் தனது வயதுக்கேற்ற கேரக்டர் கிடைத்து வருவதால் அவரும் தொடர்ந்து பிஸியாக நடித்து வருகிறார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.