எம்.ஜி.ஆர் உயிருடன் இருக்கும் போதே அப்படி ஒரு பாடல் எழுதிய வாலி! சுவாரசியமான தகவல்கள்!

நடிகை கண்ணம்மா எம்.ஜி.ஆரை கதாநாயகனாக வைத்து 1966 ஆம் ஆண்டு தாலி பாக்கியம் என்ற படத்தை சொந்தமாக தயாரித்தார். இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், சரோஜா தேவி, எம்.என். ராஜம்,வி.எஸ் சுப்பையா எம்.என் நம்பியார் ஆகியோர் நடித்தார்கள். இந்த படத்திற்கு வசனத்தை அருள்தாஸ் எழுதியிருந்தார். படத்திற்கு இசையை கே.வி மகாதேவன் இசையமைத்தார்.

இந்த படத்தை நடிகை கண்ணம்மாவின் கணவர் கே. பி. நாகபூசனம் சொந்தமாக இயக்கினார். மேலும் தாலி பாக்கியம் படத்தின் அவுட்டோர் ஷூட்டிங் கர்நாடகத்தில் உள்ள ஒரு முக்கியமான பகுதியில் நடந்து கொண்டிருந்தது. படப்பிடிப்பில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் நடிகர்கள், நடிகைகள் கலந்து கொண்டார்கள்.

அங்கு எம். ஜி. ஆர், சரோஜா தேவி சம்பந்தப்பட்ட காதல் காட்சிகள் படமாக்கப்பட்டது. அதை தொடர்ந்து எம்.என். ராஜம் சம்பந்தப்பட்ட மோதல் காட்சிகளும் படமாக்கப்பட்டது. எம்.ஜி.ஆர்,எம்.என் நம்பியார் சம்பந்தப்பட்ட சண்டைக் காட்சிகளும் வேகமாக படமாக்கப்பட்டது.

ஒருநாள் இதேபோன்று படப்பிடிப்பு நடந்து முடிந்து அனைவருக்கும் சம்பளம் மற்றும் பேட்டா கொடுப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்பொழுதுதான் தயாரிப்பாளர் தரப்பில் இருந்து கொண்டுவந்த மொத்த பணமும் திருடு போய் விட்டது என தகவல் வெளியானது.

இந்நிலையில் தயாரிப்பாளர்களான நடிகை கண்ணம்மா மற்றும் அவரது கணவர் நாகபூசனம் அவுட்டோர் ஷூட்டிங்கில் மாட்டிவிட்டோம் என தவித்தார்கள். படப்பிடிப்பு குழுவினால் பணம் திருட்டு போக பணம் திரும்பி கிடைக்க வில்லை. இப்பொழுது படத்தை அப்படியே நிறுத்தி விட்டு ஊருக்கு கிளம்புவதா? படப்பிடிப்பை நடத்துவதா? அப்படி ஊருக்கு போவதாக இருந்தாலும் அவர்களுக்கு தரவேண்டிய பணத்தை கொடுத்து விட்டு தான் போக வேண்டும் என இடிந்து போய் உட்கார்ந்து விட்டார்கள் இருவரும்.

இந்த செய்தியானது பொன்மனச் செம்மல் எம் ஜி ஆரின் காதுக்கு சென்றது. அதே நேரத்தில் தொழிலாளர்களும், நடிகர், நடிகைகளும் பிரச்சனையை எம் ஜி ஆரிடம் கொண்டு சென்றார்கள். கண்ணம்மாவும் அவரது கணவர் நாகபூசனம் அதிர்ச்சியில் எதுவும் பேசாமல் அமைதியாக அமர்ந்து விட்டார்கள்.

எம்ஜிஆர் சூழ்நிலையை புரிந்து கொண்டு அனைவரையும் அழைத்து அமைதி படுத்தினார். மேலும் தயாரிப்பாளருக்கு தைரியம் கொடுத்து படப்பிடிப்பு நிற்க வேண்டாம். படப்பிடிப்பு திட்டமிட்டபடி நடக்க வேண்டும். எல்லா பிரச்சினையும் நான் பார்த்துக் கொள்கிறேன், பணத்திற்கு ஏற்பாடு செய்கிறேன் என்றார் எம்ஜிஆர். உடனடியாக பணத்திற்கு ஏற்பாடு செய்தார்.

தமிழ்நாட்டில் உள்ள சத்யா ஸ்டூடியோவிற்கு தொடர்பு கொண்டு எம்ஜிஆர் பிக்சர்ஸ் குஞ்சப்பனிடம் பேசினார். படப்பிடிப்பிற்கான தொகை ரூபாய் 5 லட்சத்தை உடனடியாக கொண்டு வரச் சொன்னார். கேட்ட பணம் முழுவதும் படப்பிடிப்பு நடக்கும் இடத்திலேயே வந்து சேர்ந்தது. அனைவருக்கும் சம்பளமும் பேட்டாவும் கொடுக்கப்பட்டது.

திட்டமிட்ட படி அவுட்டோர் படப்பிடிப்பு முழுவதும் நடந்து முடிந்து தாலி பாக்கியம் படத்தில் தயாரிப்பாளர் கண்ணம்மா எம்ஜிஆர் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் சந்தித்து நன்றி கூறினார். படம் எடுக்க கால்ஷீட் கொடுப்பது, படப்பிடிப்பில் பிரச்சினை வந்தால் பணம் கொடுப்பது எனக்கு எந்த பிரச்சினையும் வராமல் பார்த்துக் கொண்டீர்கள் என்றென்றும் நன்றியோடு இருப்போம் என்றார் கண்ணம்மா.

மேலும் கண்ணம்மா தனது இறுதி காலத்தில் டி நகர் உள்ள ஒரு வீட்டை விற்க முயற்சித்தார். அந்த வீட்டை எம்ஜிஆர் விலை கொடுத்து வாங்கினார். உங்களது இறுதி காலம் வரை நீங்கள் இந்த வீட்டில் தான் இருக்க வேண்டும். வேறு வீட்டுக்கு போக கூடாது என்று வேண்டுகோள் வைத்தார். கண்ணம்மாவும் தனது இறுதி காலம் வரை அந்த வீட்டில் தான் இருந்தார் அவர் இறந்த பிறகு தான் எம்ஜிஆர் அந்த வீட்டை பயன்படுத்திக் கொள்ள ஏற்பாடு செய்தார்.

கணவனின் மறைவுக்கு பின் கண்களை திறக்க முடியாத சரோஜாதேவி! கன்னடத்து பைங்கிளியின் திருமண வாழ்வின் மறுபக்கம்!

இந்நிலையில் கவிஞர் வாலி எம்ஜிஆர் அவர்களை சரியாக கணித்து தான் 1968 ஆம் ஆண்டு வெளிவந்த ஒளிவிளக்கு படத்தில் ஒரு பாடல் எழுதியிருந்தார். அதில் உள்ளத்தில் உள்ளதை அள்ளித்தரும் நல்லவரை விண்ணுலகம் வா என்றால் மண்ணுலகம் என்ன ஆகும் என்று அவர் ஒரு பாடல் எழுதியிருந்தார்.

Published by
Velmurugan

Recent Posts