‘முதல்வன்’ படத்துல வந்த இந்தப்பாட்டு எங்கிருந்து எடுத்தது தெரியுமா? படித்ததை பாடலாக்கிய வைரமுத்து

இயக்குநர் ஷங்கரின் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் 1999-ல் வெளிவந்த திரைப்படம் தான் முதல்வன். அன்றும், இன்றும், என்றும் ஊழல், சாதி அரசியலுக்கு எதிரான சாட்டையடிப் படமாக வெளிவந்த முதல்வன் படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. ஷங்கர், சுஜாதாவின் புரட்சிகர வசனங்கள், ஏ.ஆர்.ரஹ்மானின் தரமான பின்னணி இசை போன்றவற்றால் படம் இன்றளவும் பேசப்படுகிறது. எப்போது தேர்தல் வருகிறதோ அப்போதெல்லாம் அர்ஜுன் ரகுவரன் சீன் சோஷியல் மீடியாக்களிலும், மீம்ஸ்களிலும் தெறிக்க விடுகிறது.

இந்தப் படத்தில் கதைக்கு அடுத்தபடியாக பேசப்பட்டது பாடல்கள் தான். கவிப்பேரரசு வைரமுத்து இந்தப் படத்திற்கான பாடல்களை எழுதினார். அனைத்து பாடல்களுமே ஹிட் ஆன நிலையில், குறிப்பாக “குறுக்கு சிறுத்தவளே..” என்ற பாடல் ஹரஹரன், மகாலட்சுமி குரலில் அப்போது டிவி சேனல்களை ஆக்கிரமித்தது. எந்தச் சேனலைத் திருப்பினாலும், உப்புக்கருவாடு பாடலும், குறுக்குச் சிறுத்தவளே பாடலும் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது.

இப்படி குறுக்குச் சிறுத்தவளே பாடலில் இடையில் இரண்டாவது சரணத்தில் வரும் ‘ஒருதடவ இழுத்து அணைச்சபடி உயிர் மூச்சை நிறுத்து கண்மணியே..’ என்ற வரிகள் எங்கிருந்து எடுக்கப்பட்டது தெரியுமா? சங்ககாலப் பெண்பால் புலவரான ஔவையார் எழுதிய அகத்திணைப் பாடல்களில் இருந்து எடுக்கப்பட்டது தான். ஔவையார் இப்படி ஒரு வரிகளை எழுதினாரா என்றால் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை. ஏனெனில் அவர் தனது இளமை வேடத்தினை வெறுத்து முருகப்பெருமானின் அருளால் துறவு பூண்டு வயோதிகர் வேடத்தினை ஏற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெயிக்கணும்கிற வெறி.. நாடி நரம்பெல்லாம் ஊறிப் போன படிப்பு.. திருப்பூரில் நடந்த அதிசயம்

இப்படி ஔவையார் தனது அகத்திணைப் பாடல் ஒன்றில் ‘மெய்புகு அன்ன கைவர் முயக்கம்’ என்ற ஒரு வரியை எழுதியிருப்பார். இந்த வரிகளுக்கு அர்த்தம் தான் வைரமுத்து முதல்வன் படத்தில் எழுதிய பாடலில் வரும் ஒருதடவ இழுத்து அணைச்சபடி என்ற வரிகள்.

இப்படி கவிஞர்கள் தாங்கள் படித்த சங்க கால நூல்களில் இருந்து அதை எடுத்து தங்களது பாடல்களின் இடையில் புகுத்தி அப்பாடலின் இனிமையைக் கூட்டுகின்றனர். இது கண்ணதாசன், வாலி போன்ற அனைத்து கவிஞர்களும் பின்பற்றும் ஓர் நடைமுறை ஆகும். இதனால் தான் கல்வி மிகப்பெரும் ஆயுதமாக விளங்குகிறது. எங்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் தாங்கள் கற்ற கல்வியானாது தக்க சமயத்தில் கைகொடுக்கும் என்பதற்கு பாடல்களும் ஓர் உதாரணம்.

Published by
John

Recent Posts