ஜாக்பாட் அடித்த சந்தானம்!.. வடக்குப்பட்டி ராமசாமி படத்தோட முதல் நாள் வசூல் இவ்வளவா?

டிக்கிலோனா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அயலான் படத்தின் இயக்குனர் ரவிக்குமார் போல கார்த்திக் யோகி சந்தானத்தை வைத்து டைம் டிராவல் கதையை கொண்டு செம காமெடி படத்தை இயக்கியிருந்தார். பிரேம் ஆனந்த் உடன் இணைந்து கடந்த ஆண்டு சந்தானம் நடித்த டிடி ரிட்டர்ன்ஸ் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக சந்தானத்துக்கு மாறியது.

ஆனால், அதன் பின்னர் சந்தானம் நடித்த கிக் மற்றும் கடந்த ஆண்டு கடைசியில் வெளியான 80ஸ் பில்டப் உள்ளிட்ட படங்கள் படுதோல்வியை சந்தித்துள்ளது. அதன் பின்னர், மீண்டும் வெற்றியை கொடுக்க வேண்டும் என நினைத்த சந்தானம் மீண்டும் கார்த்திக் யோகி படத்தில் நடிக்க ஆரம்பித்தார்.

வடக்குப்பட்டி ராமசாமி வசூல்:

அவரது டார்கெட் மிஸ் ஆகாத நிலையில், வடக்குப்பட்டி ராமசாமி படம் வெளியாகி விமர்சன ரீதியாக வெற்றியடைந்துள்ளது. முதல் நாளில் சந்தானத்துக்கு பெரிய அளவில் ரசிகர் வட்டம் இல்லாத நிலையில், வடக்குப்பட்டி ராமசாமி திரையிடப்பட்ட 600 திரைகளில் வெளியான திரைப்படம் 1 கோடி ரூபாய் வசூலை ஈட்டியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கார்த்திக் யோகி இயக்கி உள்ள இந்த படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். தனுஷுக்கு ஜோடியாக எனை நோக்கிப் பாயும் தோட்டா படத்தின் மூலம் ஹீரோயினாக அவர் அறிமுகமான நிலையில், ரஜினிகாந்தின் பேட்ட உள்ளிட்ட படங்களில் நடித்தார். ஒரு பக்க கதை படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்த அவருக்கு அடுத்து பெரிய படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இந்நிலையில், சந்தானத்துக்கு ஜோடியாக இந்த படத்தில் 70களில் வரும் இளம் பெண்ணை போல நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

சந்தானத்துடன் இணைந்து மொட்டை ராஜேந்தர், லொள்ளு சபா மாறன், சேஷு, எம்.எஸ். பாஸ்கர், ரவி மரியா, நிழல்கள் ரவி, பிரசாந்த் ரங்கசாமி என பல நடிகர்கள் டிக்கிலோனா படத்தில் அதிகம் பேர் நடித்து காமெடி சரவெடியை கொடுத்தது போல வடக்குப்பட்டி ராமசாமி படத்தையும் ரசிகர்கள் சிரிக்கும் படி உருவாக்கி உள்ளனர்.

கடவுளின் பெயரால் மக்கள் மூடநம்பிக்கையில் இருப்பதை பயன்படுத்தி அவர்களை மேலும், ஏமாற்றும் கதாபாத்திரத்தில் சந்தானம் படம் முழுக்க நடித்து சிரிக்கவும் அதே வேளையில் சிந்திக்கவும் வைத்துள்ளார்.  முதல் நாளில் 1 கோடி ரூபாய் வசூல் ஈட்டியுள்ள இந்த படம் சனி, ஞாயிறுகளில் அதிக வசூலை ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...