வாத்தி படத்தின் பாடல் – தனுஷ் மற்றும் ஜிவி வெளியிட்ட மாஸ் அப்டேட்!

தனுஷின் நானே வருவேன் திரில்லர் திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் வெங்கி அட்லூரியுடன் கைகோர்த்துள்ள தனுஷ்,தமிழ்-தெலுங்கு இருமொழிகளில் உருவாகும் ‘வாத்தி’ படத்தில் நடித்து வருகிறார்.தெலுங்கு பதிப்பிற்கு ‘சார்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

தனுஷ் ஆசிரியராக நடித்திருப்பதால் தயாரிப்பாளர்கள் ‘வாத்தி’ என்ற தலைப்பைத் தேர்ந்தெடுத்துள்ளனர், மேலும் படம் 1980 களில் உருவாகிறது. சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாத்தி படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஐத்தராபாத் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது. ஜிவி பிரகாஷ் குமார் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.

இப்படத்தின் இசையமைப்பாளரான ஜிவி , “வாத்தி’ படத்தின் முதல் சிங்கிள் விரைவில் வெளியாகும் என்றும் அந்த பாடலை எழுதியது தனுஷ்,ஒரு காதல் பாடல்” என முதல் சிங்கிள் வெளியீடு குறித்து ஒரு அப்டேட் கொடுத்திருந்தார்.

சிம்புவின் பத்து தல படத்தின் டிஜிட்டல் உரிமையைப் பெற்ற பிரபல OTT தளம்? மாஸ் அப்டேட்!

சமீபத்தில் தனுஷ் நடித்த வாத்தி படத்தின் தயாரிப்பாளர்கள் படத்தின் முதல் சிங்கிள் வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளனர். வாத்தி படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார், முதல் சிங்கிள் நவம்பர் 10, 2022 அன்று [வியாழன்] வெளியிடப்படும்.

இந்நிலையில் நாளை வெளியாகும் பாடளுக்காக தனுஷ் மற்றும் ஜிவி இணைந்து புரொமோஷன் வீடியோ வெளியிட்டுள்ளனர்.அந்த வீடியோவில் ஜிவி இசையமைக்க தனுஷ் பாடல் வரிகளை பாடியுள்ளார்.

அந்த வீடியோ இதோ …

 

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...