உறியடி 2 எப்படி உள்ளது

சூர்யாவி 2டி எண்டர்டெயின்மெண்ட் சார்பில் தயாராகி வந்துள்ள படம் உறியடி 2. 2016ல் வந்த உறியடி படத்தின் இயக்குனரும் கதாநாயகனுமான விஜய்குமார் நடிப்பில் இயக்கத்தில் இப்படம் வெளிவந்திருக்கிறது.


சுதாகர், விஸ்மயா, சங்கர்தாஸ் மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

உறியடி 1 படத்தின் கதை போல் அல்லாமல் முற்றிலும் சமுதாய பிரச்சினையை மட்டும் கையில் வைத்துக்கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் படம். அதில் ஓரளவு வெற்றியும் கண்டிருக்கிறார்கள்.

கடந்த ஆண்டு தூத்துக்குடியில் நடந்த ஸ்டெர்லைட் போராட்டமும் அதனை தொடர்ந்து நடந்த துப்பாக்கி சூடும் கலவரமும் அனைவரும் அறிந்தது.

அது போல ஒரு கதையை இயக்குனர் மையப்படுத்தி அது சார்ந்த போராட்டங்களை மையப்படுத்தி கதை செய்திருக்கிறார் இயக்குனர்.

கெமிக்கல் இஞ்சினியரான ஹீரோ அந்த மோசமான கெமிக்கல் பேக்டரியில் சந்தர்ப்ப சூழ்நிலையால் வேலைக்கு சேர்ந்து அங்கிருக்கும் அவலங்களை அறிந்து அதை அகற்ற மக்களோடு சேர்ந்து போராடுவதே கதை.

கார்ப்பரேட் கம்பெனிகளின் வில்லத்தனத்தை இயக்குனர் நன்றாக தோலுரித்திருக்கிறார். பாராட்டப்பட வேண்டிய படம் .

Published by
Staff

Recent Posts