இந்தாங்க 1 கோடி.. வாரி அள்ளிக் கொடுத்த உதயநிதி.. எதற்காக தெரியுமா?

கலைஞர் கருணாநிதி முதல் தற்போது அவரது பேரன் உதயநிதி ஸ்டாலின் வரை திரைத்துறையில் பல்வேறு பங்களிப்புகளைச் செய்து வருகின்றனர். கலைஞர் கருணாநிதி தனது கூர்மையான எழுத்து என்னும் ஆயுதத்தால் சமுதாயத்தில் நிலவும் அவதூறுகளை, மூடப்பழக்கங்களை அகற்ற திரையில் பங்களிப்புச் செய்தார். மேலும் திராவிடக் கருத்துக்களையும் மக்கள் மத்தியில் வளர்த்தார். அதனைத் தொடர்ந்து மு.க.ஸ்டாலினும் பல்வேறு நாடகங்களிலும், சில திரைப்படங்களிலும் நடித்து திராவிடக் கருத்துக்களைப் பரப்பினார்.

அதன் பின் கால மாற்றம் ஏற்பட திமுகவும் நன்கு வளர்ந்து இன்று தமிழகத்தையே ஆளும் சக்தியாகத் திகழ்கிறது. இந்நிலையில் மு.க.ஸ்டாலினின் மகனான உதயநிதி ஸ்டாலினும் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். இவர் வெளியீட்டில் வந்த படமான ஆதவன் படத்தில் ஒரு சிறிய காட்சியில் நடிக்க ஆரம்பித்தவர் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் மூலமாக ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தார். இப்படம் இவருக்கு ஹிட் கொடுக்கவே தொடர்ந்து பல படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

மேலும் மிஷ்கின், சீனு ராமசாமி போன்ற முன்னனி இயக்குநர்களும் உதயநிதியின் நடிப்புத் திறமையை வெளிக் கொண்டு வந்தனர். இதன் உச்சமாக கடந்த ஆண்டு வெளியான மாரி செல்வராஜ இயக்கத்தில் மாமன்னன் படத்தில் சிறப்பாக நடித்திருந்தார் உதயநிதி ஸ்டாலின். இவ்வாறு பல படங்களில் நடித்த உதயநிதி தற்போது இளைஞர் நலன், சிறப்புத் திட்ட செயலாக்கம், விளையாட்டுத் துறை அமைச்சராக இருப்பதால் சினிமாவில் நடிப்பதைக் குறைத்துக் கொண்டார். தொடர்ந்து மக்கள் பணியை மேற்கொண்டு வரும் உதயநிதி ஸ்டாலின் அண்மையில் நடிகர் சங்கத்திற்காக கட்டிடம் கட்டும் பணிக்காக ரூ. 1 கோடியை வழங்கியுள்ளார்.

நடிகர்களின் புகழையே விஞ்சிய வானொலி உலகின் பிதாமகர்.. யார் இந்த ஆர்ஜே மயில்வாகணன் ?

தென்னிந்திய திரைப்படச் சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினர் என்ற முறையில் நடிகர் சங்க நிர்வாகிகளான நாசர், கார்த்தி, விஷால், பூச்சி முருகன் ஆகியோரிடம் அவர் இந்த ஒரு கோடி ரூபாயை அளித்திருக்கிறார். தற்போது நடிகர் சங்கம் கட்டிடம் கட்டும் பணிகள் நடைபெற்று வரும் வேளையில் உதயநிதி போன்ற முன்னனி நடிகர்கள் பலரும் உதவினால் விரைவில் இப்பணிகள் நிறைவடைந்து விடும். அண்மையில் கேப்டன் விஜயகாந்த் மறைவிற்குப் பின் நடிகர் சங்கம் கட்டிடத்திற்கு அவர் பெயர் வைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.