நயன்தாராவிற்கு போட்டியாக சம்பளத்தை மூன்று மடங்கு உயர்த்திய திரிஷா!

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி ஹீரோயின் ஆக போட்டி போட்டு வலம் வருபவர்கள் தான் நடிகை நயன்தாரா மற்றும் நடிகை திரிஷா. இளைஞர்களின் கனவு கன்னியாக உச்சத்தில் இருக்கும் இந்த இரண்டு நடிகைகளும் கோடிக்கணக்கான ரசிகர் கூட்டத்தை தன்வசப்படுத்தி உள்ளனர். 20 ஆண்டுகளைக் கடந்த இவர்களின் திரை வாழ்க்கையில் அஜித், விஜய், ரஜினி,சூர்யா என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளனர். தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு என பிற மொழி படங்களிலும் நடித்து தென்னிந்திய ரசிகர்களை மிரள வைத்துள்ளனர்.

இந்நிலையில் நடிகை நயன்தாரா மற்றும் திரிஷா ஒரு படத்தில் இணைந்து நடிக்க உள்ளதாக சமீபத்திய தகவல் வெளியாகி இருந்தது. நடிகை நயன்தாரா ஹிந்தியில் ஜவான் படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து தனது 75வது திரைப்படம் ஆன அன்னபூரணி திரைப்படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து முன்னணி இளம் இயக்குனர்களின் இயக்கத்தில் நடிகை நயன்தாரா அடுத்தடுத்து நான்கு படங்களில் நடிக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதற்கிடையில் மணிரத்தினம் இயக்கத்தில் கமலஹாசனின் 234 வது திரைப்படமான தக் லைஃப் திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடிக்க உள்ளதாக தகவல்கள் கிசு கிசுக்கப்படுகிறது.

மேலும் இந்த படத்தில் நடிகர் கமலஹாசன் உடன் இணைந்து நடிகை திரிஷா நடிக்க உள்ளதாக உறுதியான தகவல் வெளியாகியிருந்தது. இதே மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் 1 பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தில் நடித்ததன் மூலம் நடிகை திரிஷா பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறியுள்ளார். இந்த படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் அழகு தேவதையாக வலம் வந்த திரிஷா உலக அளவில் தனக்கென பெரிய ரசிகர் கூட்டத்தை உருவாக்கியுள்ளார்.

20 வருடத்தில் 80 படங்களைத் தொட்ட லேடிஸ் சூப்பர் ஸ்டார் நயன்தாரா?

இந்த படத்தை தொடர்ந்து சமீபத்தில் திரிஷா மற்றும் தளபதி விஜய் இணைந்து நடித்த லியோ திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை ஏற்படுத்திக் கொடுத்தது. உலக அளவில் இந்த திரைப்படம் 600 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்தது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகை திரிஷா தற்பொழுது நடிகர் அஜித் உடன் இணைந்து விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். அஜர்பைஜானில் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் தற்பொழுது துபாயில் இரண்டாம் கட்ட படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்தடுத்து திரைப்படங்களில் வெற்றி நடை போட்டு வரும் திரிஷா சமீப காலமாக வெப் சீரிஸ்களிலும் தனது கவனத்தை செலுத்தி வருகிறார். இந்நிலையில் திரையுலகின் போட்டி நடிகைகளாக வளம் வரும் நயன்தாரா மற்றும் திரிஷா கமலின் தக் லைப் திரைப்படத்தில் இணைந்து நடிப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அந்த வகையில் ஜவான் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகை நயன்தாரா கமலுடன் இணையும் அந்த திரைப்படத்திற்கு 12 கோடி வரை சம்பளம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் பொன்னியின் செல்வன் லியோ போன்ற பிரம்மாண்ட திரைப்படங்களில் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து நடிகை திரிஷா கமலுடன் இணையும் படத்திற்கு 10 கோடி வரை தான் சம்பளத்தை உயர்த்தி உள்ளதாக சமீபத்திய தகவல் வெளியாகி உள்ளது. தளபதி விஜயுடன் இணைந்து நடித்த லியோ திரைப்படத்திற்கு நடிகை திரிஷா நான்கு கோடி வரை சம்பளம் வாங்கியது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.