தீபாவளி பண்டிகைக்கு ட்ரெண்டாகும் பலகாரம்

தீபாவளி என்றாலே எல்லோருக்கும் சந்தோஷம். புத்தாடை அணிந்து பல வகையான உணவுகளை உண்டு மகிழ்வார்கள். இதில் பலகாரங்களை வீட்டில் செய்து அருகில் உள்ள வீடுகளுக்கும் பலகாரங்களை கொடுத்து மகிழ்வார்கள்.

தீபாவளி என்றால் எல்லோர் மனதிலும் தோன்றும் பலகாரம் முறுக்கு, வடை, அதிரசம், சீடை, லட்டு, பால் ஸ்வீட்ஸ் போன்ற பலவகையானவை ஆகும். இவற்றினை வீட்டிலும் செய்து மகிழ்கின்றனர். தீபாவளி அன்று வண்ண வண்ண கலர்களில் புத்தாடை அணிந்து மத்தாப்பூ கொலுத்தியும் கொண்டாடி மகிழ்வார்கள்.

தற்போது தீபாவளி ஸ்பெஷலாக மைசூர்பா, பால் ஸ்வீட், லட்டு, போலி, கோதுமை அல்வா மற்றும் பலவகையான இனிப்பு பலகார வகைகள் பண்டிகையின் போது தெய்வங்களுக்கு படைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தி வருகின்றனர்.

தீபாவளி எல்லோரும் கொண்டாடும் ஒரு விழாவாக கருதப்படுகிறது. தீபாவளியை எல்லோரும் பண்டிகைகளின் ராணி எனவும் கூறுகிறார்கள். தீபாவளி அன்று வண்ண வண்ண விளக்குகள் ஏற்றி வீடுகளினை அலங்கரித்து வைப்பது வழக்கம். விதவிதமான உணவுகளையும், பலகாரங்களையும் செய்வதும் முக்கியமான ஒன்றாகும்.

Published by
Staff

Recent Posts