ஜோதிட சென்டிமெண்டில் நம்பிக்கை கொண்ட டி.ஆர்

டி.ஆர் இவர் பேசினாலே மாஸ்தான். சாதாரண விஷயத்தை கூட மிக விரிவாக அடுக்கு மொழியில் பேசும் அந்தக்காலத்திலேயே எம்.ஏ படித்த நபர். நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையை சேர்ந்த டி.ஆர் ஜோதிடப்பற்று கொண்டவர்.


நியூமராலஜி எனும் எண்கணிதம் மீது அதிக நம்பிக்கை கொண்டவர் அதனால்தான் தனது அனைத்து படங்களின் பெயர்களையும் அந்தக்காலத்திலேயே ஒன்பது எழுத்தில் வருமாறு அமைத்தார்.

டி.ஆர் செம பீக்கில் இருந்த எண்பது தொண்ணூறுகளில் அவரின் படப்பெயர்கள் 9 எழுத்தை தாண்டி வராது.

சாந்தி எனது சாந்தி, ஒரு வசந்த கீதம்,எங்க வீட்டு வேலன்,தங்கைக்கோர் கீதம், என் தங்கை கல்யாணி, ஒரு தாயின் சபதம், மைதிலி என்னை காதலி, உறவைக்காத்த கிளி, என அனைத்து படங்களும் ஒன்பது எழுத்துக்கள்தான்.

ஆரம்பத்தில் வந்த ஒரு தலை ராகம் இப்போது நடித்து வரும் படங்கள் இதற்கு விதி விலக்கு.

ஜோதிடப்பற்று காரணமாகவே சிம்பு என்ற பெயரை எஸ்டி ஆர் எனவும் தனது பெயரை விஜய டி ராஜேந்தர் எனவும் மாற்றி அமைத்துள்ளார்.

Published by
Staff

Recent Posts