ஒரு படம் கூட தோல்வி இல்லை!! தமிழ் சினிமாவின் டாப் 3 டைரக்டர்ஸ்!!!

பொதுவாக கதாநாயகர்களாக லேயே தொடர்ந்து பிளாக்பஸ்டர் ஹிட் கொடுக்கும் திரைப்படங்களை கொடுப்பது அவ்வளவு கடினமானதாக காணப்படும். அந்த நிலையில் தற்போது தமிழ் சினிமாவின் இயக்குனர்கள் தொடர்ந்து தங்களது படங்களில் விடாமல் பிளாக்பஸ்டர் ஹிட்  கொடுத்து தமிழ் சினிமாவை தாங்கிக் கொண்டு காணப்படுகின்றனர்.

அவர்களில் தற்போது முதல் மூன்று தோல்வியை தழுவாத டைரக்டர்கள் பற்றிய தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வெற்றிமாறன்:

இதில் முதலிடத்தில் உள்ளார் இயக்குனர் வெற்றிமாறன் இயக்குனர் வெற்றிமாறன். இதுவரை 5 திரைப்படங்களை இயக்கியுள்ளார். இந்த ஐந்து திரைப்படங்களில் ஆடுகளம், அசுரன், விசாரணை போன்றவை தேசிய விருதினை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

வெற்றிமாறன்

மீதமுள்ள பொல்லாதவன் மற்றும் வட சென்னை ஆகிய இரண்டு படங்களும் பிளாக்பஸ்டர் ஹிட் . இதனால் இவர் இயக்கத்தில் வெளியான அனைத்து திரைப்படங்களும் தற்போது வரை பிளாக்பஸ்டர் ஹிட்  என்பதும் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது இவர் தற்போது சூர்யாவை கொண்டு படம் ஒன்றை இயக்கி கொண்டு வருகிறார்.

அட்லி:

இதற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் காணப்படுகிறார் இயக்குனர் அட்லி. இயக்குனர் அட்லி இதுவரை நான்கு படங்கள் இயக்கியுள்ளார் அதிலும் இவர் இயக்கத்தில் முதலில் வெளியான ராஜா ராணி என்ற திரைப்படம் இன்றளவும் காதலர்களை கலங்க வைக்கும் திரைப்படமாக காணப்படுகிறது.

director atlee reveals he is a lychnobite bigil mersal theri thalapathy vijay 1615469006

இதற்கு அடுத்து நடிகர் விஜய்யை கொண்டு தொடர்ந்து மூன்று படங்களை இயக்கி அந்த மூன்று படங்களும் ரசிகர்கள் மற்றும் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இதனால் இவர் இயக்கிய நான்கு படங்களும் வெற்றி அடைந்துள்ளதால் தோல்வியை சந்திக்காத இயக்குனராக அட்லி திகழ்கிறார். மேலும் இவர் தற்போது நடிகர் ஷாருக் கானை வைத்து படம் ஒன்றை இயக்கி கொண்டு வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

லோகேஷ் கனகராஜ்:

இதற்கு அடுத்தபடியாக தமிழ் சினிமாவின் நம்பிக்கை இயக்குனராக மாறியுள்ள லோகேஷ்  கனகராஜ் தான்.  இவர் இதுவரை நான்கு படங்கள் இயக்கியுள்ளார். இந்த நான்கு படங்களும் நான்கு விதமான கதாபாத்திரங்களை மையமாக கொண்டு வெளியான திரைப்படமாக உள்ளது.

lokesh1200

முதலில் இவர் இயக்கத்தில் மாநகரம் என்ற திரைப்படம் வெளியாகி அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது.

அதற்கு அடுத்து கைதி என்ற திரைப்படத்தின் மூலம் பெரிய இயக்குனராக அனைவராலும் மதிக்கப்பட்டார்.

மூன்றாவதாக நடிகர் விஜயை கொண்டு மாஸ்டர் என்ற திரைப்படத்தை இயக்கி வெற்றி கண்டார். தற்போது இவர் இயக்கத்தில் வெளியாகியுள்ள விக்ரம் என்ற திரைப்படம் தமிழ் சினிமாவை மீண்டு எடுத்துள்ளதாக காணப்படுகிறது. எனவே இவரும் இதுவரை தோல்வியே சந்திக்காத இயக்குனராக காணப்படுகிறார்.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.