செய்திகள்

தக்காளி ரூ.130; இஞ்சி ரூ.270; விலை உயர்வு குறித்து வியாபாரிகள் சொல்வது என்ன?

தமிழ்நாட்டில் தக்காளி விலை அதிகரிப்பைத் தொடர்ந்து காய்கறிகளின் விலையும் உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.

தமிழ்நாட்டு மக்களுக்கு தேவையான பெரும்பாலான காய்கறிகள் வெளிமாநிலங்களில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகின்றன. சமீப நாட்களாக அண்டை மாநிலங்களில் இருந்து வரத்து குறைவாக இருப்பதால் விலை கிடு கிடுவென உயர்ந்து வருகின்றன. கடந்த 10 நாட்களாக காய்கறிகள் விலை உயர்ந்து வந்த நிலையில், பக்ரீத் பண்டிகையையொட்டி, தக்காளி, இஞ்சி உள்பட பெரும்பாலான காய்கறிக்ள வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது.

தக்காளி விலை ரூ.100 தாண்டி விற்பனை செய்து வந்த நிலையில், இஞ்சி விலையும் ரூ.270 வரை விற்பனையாகி வருகிறது. இன்றைய நிலவரப்படி, சென்னையில் தக்காளி விலை கிலோவுக்கு ரூ.100 முதல் 130 வரையும், சின்ன வெங்காயம் விலை ரூ.80 ஆகவும், கேரட் விலை கிலோவுக்கு ரூ. 60 முதல் 80 வரையும், பீன்ஸ் விலை கிலோவுக்கு ரூ.100 முதல் 120 வரையும் விற்பனை செய்யப்படுகிறது. இஞ்சி விலை கிலோவுக்கு ரூ.270 என்ற நிலையில் உள்ளது

தியாகராய நகர் காய்கறி சந்தையைச் சேர்ந்த வியாபாரிகள் கூறுகையில், “காலநிலை மாற்றத்தினாலும், வெளி மாநிலங்களில் விளைச்சல் குறைந்துள்ளதாலும், வரத்து குறைவாக இருக்கிறது. இதனால் விலை உயர்ந்து உள்ளது என்கின்றனர்.

காலநிலை மாற்றத்தால் காய்கறியின் விலை சில நாட்களாக அதிகரித்து வருகிறது, இருப்பினும் காய்கறிகள் அத்தியாவசிய தேவை என்பதால் அதிக விலை இருந்தாலும் அதனை வாங்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. காய்கறிகளின் விலையும் உயர்வால் பொது மக்கள் நடுத்தர மக்கள் தான் பாதிப்பு அடைகின்றனர் விலைவாசியை கட்டுப்படுத்த அரசாங்கம் ஏதேனும் முயற்சி எடுத்தால் நடுத்தர மக்களாகிய எங்களுக்கு உபயோகமாக இருக்கும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Published by
Amaravathi

Recent Posts