மறந்துடாதீங்க!! குரூப்-1 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்!!

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் அறிவிக்கப்படாமல் இருந்தது. தற்போது தொற்று பரவல் குறைந்து இருப்பதால் டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் குரூப்-1 தேர்வு குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன் படி,  துணை ஆட்சியர், டிஎஸ்பி, வேலைவாய்ப்பு பதிவு அதிகாரி உள்ளிட்ட பதவிகளுக்கு 92 இடங்களை நிரப்ப அக்டோபர் 30-ம் தேதி முதனிலைத் தேர்வு நடைபெற உள்ளது.

இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் இன்று இரவு 11:59 மணிக்கு முடிவடைகிறது. இதனிடையே வருகின்ற 27-ம் தேதி நள்ளிரவு முதல் 29-ம் தேதி நள்ளிரவு வரையில் விண்ணப்பங்களில் திருத்தம் செய்துகொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

மொத்தமுள்ள 92 இடங்களுக்கு இதுவரையில் மூன்று லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் விண்ணப்ப கட்டணமாக ரூ.100 செலுத்தி டிஎன்பிஎஸ்சி இணையதள பக்கத்தில் சென்று விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்லது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.