இன்று ‘இந்தியா-இங்கிலாந்து’ அணிகளுக்கிடையான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி!!

இந்திய அணியின் தரவரிசையை பலரும் விமர்சனம் செய்து கொண்டு வந்த நிலையில் அவர்களின் வாயை மூடும் வகையில் கடந்த இங்கிலாந்து-இந்தியா டி20 தொடர் அமைந்தது.

ஏனென்றால் இந்த தொடரினை இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது. அதிலும் குறிப்பாக இந்த போட்டிகள் அனைத்தும் இங்கிலாந்து நாட்டில் நடைபெற்றுக் கொண்டு வந்தன.

இந்த நிலையில் இங்கிலாந்துடன் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரினையும் இந்தியா மேற்கொண்டுள்ளது. இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது.

லண்டன் ஓவல் மைதானத்தில் இந்திய நேரப்படி மாலை 05:30 மணிக்கு முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தொடங்குகிறது. 20 ஓவர் போட்டி கொண்ட தொடரை இழந்ததில் அதிருப்தியில் உள்ள இங்கிலாந்து வீரர்கள் 50 ஓவர் போட்டியில் ஆக்ரோசமாக விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடப்புச் சாம்பியன் இங்கிலாந்து தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.