இன்று கிருஷ்ண ஜெயந்தி

மஹாபாரதம் நடந்த காலக்கட்டத்தில் போர்க்களத்தில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் உபதேசித்த கருத்துக்களே பகவத் கீதையாக போற்றப்படுகிறது. ஹிந்துக்களின் புனித வேத நூலாக போற்றப்படுகிறது. ஹிந்துக்கள் ஆவணி மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் கிருஷ்ணர் பிறந்த நாளை கிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடுகின்றனர்.

இதை கோகுலாஷ்டமி என்றும் கிருஷ்ண ஜென்மாஷ்டமி என்றும் கூறுவர். இன்று காலை 7.40க்கு மேல் ரோகிணி நட்சத்திரம் ஆரம்பிக்கிறது

எல்லோருமே இன்று  வீடுகளை சுத்தம் செய்து  கிருஷ்ணர் படத்தை அலங்கரித்து , சீடை, முறுக்கு, தேன்குழல் போன்ற பலகாரங்கள் பட்ஷணங்கள் செய்து ஸ்ரீ கிருஷ்ணருக்கு மனமார படைத்து உடன் வெண்ணெய்யும் படைத்து அவரை நினைத்து உங்கள் பிரச்சினைகளை சொல்லி மனதார ஆழ்ந்து வழிபடுங்கள் ஸ்ரீ கிருஷ்ணர் உங்களுக்கு வழிகாட்டுவார்.

உங்கள் வீட்டு குழந்தைகளுக்கு ஸ்ரீ கிருஷ்ணர் வேடம் செய்வித்து மகிழுங்கள் நன்றி.

Published by
Staff

Recent Posts