ஐபிஎல் இறுதி போட்டி: 4வது முறையாக கோப்பையை கைப்பற்றுமா சிஎஸ்கே?

ஐபிஎல் தொடரின் இறுதி போட்டி இன்று நடைபெற உள்ள நிலையில் இன்றைய போட்டியில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் பலப்பரீட்சை செய்ய உள்ளன
இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி தான் இந்த ஆண்டின் ஐபிஎல் சாம்பியன் என்பதால் இரு அணிகளும் சாம்பியன் பட்டம் பெற தீவிர முயற்சி செய்யும் என்பது குறிப்பிடதக்கது.

ஐபிஎல் தொடரை பொறுத்தவரை சென்னை அணி ஏற்கனவே 8 முறை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற நிலையில் தற்போது ஒன்பதாவது முறையாக தகுதி பெற்றுள்ளது என்பதும் ஏற்கனவே 3 முறை கோப்பையை கைப்பற்றியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கொல்கத்தா அணியை பொறுத்தவரை ஏற்கனவே இரண்டு முறை இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று இரண்டு முறையும் சாம்பியன் கோப்பையை கைப்பற்றி உள்ளது என்பதும் அதில் ஒரு முறை சென்னை அணியை தோற்கடித்து சாம்பியன் பட்டம் பெற்று உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையே நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வெல்லும் அணி எது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இன்றைய போட்டி துபாய் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.