ரூ.2,09,000 சம்பளத்தில் வேலை: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

ரூ.2,09,000 சம்பளத்தில் வேலை வாய்ப்பு இருப்பதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளதை அடுத்து இந்தப் பணிக்கு விண்ணப்பம் செய்ய பலர் முன்வந்துள்ளனர்.

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையில் மாவட்ட கல்வி அலுவலர் என்ற பணிக்கு காலியிடங்கள் நிரப்பப்பட இருப்பதாக டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த பணிக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பம் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 11இடங்கள் காலியாக இருப்பதாகவும் இந்த வேலைக்கு சம்பளம் ரூ.2,09,000 வரை அதிகபட்சமாக வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், பொருளாதாரம், புவியியல், வரலாறு, தமிழ், வணிகம், ஆங்கிலம் ஆகிய ஏதாவது ஒரு பிரிவில் முதுகலை பட்டம் பெற்று அதற்கு அப்புறம் பிஎட் படிப்பு முடித்திருக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்ய 150 ரூபாய் பதிவு கட்டணம் என்றும் முதல்நிலை தேர்வு கட்டணம் 100 மற்றும் முதன்மை தேர்வு கட்டணம் 200 சேர்த்து ஆன்லைனில் செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு என மூன்று நிலைகளில் தேர்வு வைக்கப்படும் என்றும் இந்த பணி குறித்து மேலும் விவரங்கள் தெரிந்து கொள்ள www.tnpscexams.in www.tnpsc.gov.in ஆகிய இணையதளங்களில் சென்று விண்ணப்பதாரர்கள் தெரிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 13ஆம் தேதி இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
Bala S

Recent Posts