துலாம் பங்குனி மாத ராசி பலன் 2023!

துலாம் ராசியினைப் பொறுத்தவரை குடும்பத்தில் கணவன்- மனைவி இடையே மன வருத்தங்கள் ஏற்படும். வேலை செய்யும் இடங்களில் சக பணியாளர்களுடன் பிரச்சினைகள், வாக்குவாதங்கள் ஏற்படும்.

குருபகவான் சாதகமாக இருப்பதால் பணவருமானம் ரீதியாக ஆதாயத்தினைக் கொடுப்பார். சனி பகவான் 50-50 நேர்மறையான மற்றும் எதிர்மறையான பலன்களைக் கொடுக்கவுள்ளார்.

7 ஆம் இடத்தில் சனி பகவான் இருப்பதால் வாழ்க்கைத் துணையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மேலும் வண்டி, வாகனங்களில் செல்லும்போது கவனமாக இருத்தல் வேண்டும்.

ஆரோக்கியம் சார்ந்த கடன்கள் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களால் ஏற்பட்ட வீண் செலவுகள் குறையும். நண்பர்கள் மற்றும் வாழ்க்கைத் துணை இதுவரை உங்கள் பேச்சைக் கேட்காத நிலையில் இனி உங்கள் வார்த்தையினைப் பின்பற்றுவர்.

தொழில் கூட்டாளர்களுடன் கவனத்துடன் இருத்தல் நல்லது. பாக்கிய ஸ்தானமான 9 ஆம் இடத்தில் செவ்வாய் பகவான் உள்ளார். இளைய சகோதரர்களுடனான அன்பு அதிகரிக்கும். தொழில் அபிவிருத்தி செய்யும் முயற்சிகள் ரீதியாக கடன்கள் கிடைக்கும்.

வேலைவாய்ப்புரீதியாக இடமாற்றம், வேலை மாற்றம் போன்றவை ஏற்படும். மேலும் வேலைவாய்ப்புரீதியாக அலைச்சல்கள் ஏற்படும்.

கொடுத்த பழைய கடன்கள் வசூலாகும். வியாபாரரீதியாக நஷ்டம் பெரிதளவில் இருக்காது. குழந்தை பாக்கியத்துக்கு எதிர்பார்த்து இருப்போருக்கு நற் செய்திகள் கிடைக்கப் பெறும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.