துலாம் நவம்பர் மாத ராசி பலன் 2022!

இராசிநாதன் சுக்கிரன் 2 ஆம் இடத்திற்கு இடம் பெயர்வு அடைகிறார், பின் சுக்கிரன் சூர்யன் மற்றும் புதனுடன் இணைவார். 8 ஆம் இடத்தில் செவ்வாய், சனி பகவான் 10 ஆம் இடத்தில் இருப்பார்.

பொருளாதாரரீதியாக இருந்த மந்தநிலையில் மாற்றம் காண்பீர்கள், ஏற்கனவே கொடுத்த கடன்கள் வந்து சேரும். கடன் தொல்லைகளில் இருந்து ஓரளவு மீள்வீர்கள்.

புது வேலை, வெளிநாடு வேலை என நீங்கள் எதிர்பார்த்த விஷயங்களுக்கு முயற்சிக்கலாம். மிகவும் சிந்தித்துச் செயல்பட்டு சனி பகவானால் ஏற்படும் சிக்கல்களில் இருந்து விடுபடுவீர்கள்.

கேதுவின் இடவமைவால் திருமண ரீதியாக எதிர்பார்த்த வரன்கள் கைகூடாது. சிலருக்கு திருமணத்தில் நாட்டமே இருக்காது. மேலும் கைகூடும் நிலையில் இருந்த திருமண காரியங்களும் தள்ளிப் போகும்.

காதலர்கள் காதலை வீட்டில் சொன்னால் பெரும் பிரச்சினைகள் ஏற்படும், கணவன்- மனைவி இடையே உறவினர்களால் பிரச்சினைகள் ஏற்படும். மாணவர்களைப் பொறுத்தவரையில் சூர்யன்- புதனின் ஆதித்ய யோகம் கல்விரீதியாக முன்னேற்றத்தினைக் கொடுக்கும்.

பாகப் பிரிவினை ரீதியாக இருந்த பிரச்சினைகள் சரியாகும். ஆரோக்கியம் ரீதியாக பிரச்சினைகளில் இருந்து மீள்வீர்கள். இதுவரை பூர்த்தி செய்யப்படாமல் இருந்த அடிப்படைத் தேவைகள் பூர்த்தியாகும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.