துலாம் மாசி மாத ராசி பலன் 2023!

திருமண காரியங்களைப் பொறுத்தவரை திருமணம் முடிந்துவிடும் என்ற நிலையில் தட்டிப் போக வாய்ப்புண்டு. தொழில் ரீதியாக எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் கிடைக்கப் பெறும். குழந்தைகளின் எதிர்காலத்திற்காகத் திட்டமிட்டு சேமிக்கத் துவங்குவீர்கள்.

பிள்ளைகளுடன் மனக் கசப்புகள் ஏற்படும். குடும்பத்துடன் குல தெய்வக் கோவிலுக்குச் சென்று வருவீர்கள். வீடு, மனை வாங்க நினைப்போர் அதற்கான முடிவுகளை எடுப்பீர்கள். எலெக்ட்ரானிக் பொருட்கள் சார்ந்த விஷயங்கள் ரீதியாக கோளாறுச் செலவுகள் ஏற்படும்.

வேலைவாய்ப்பினைப் பொறுத்தவரை நீங்கள் எதிர்பார்த்த வேலைவாய்ப்பு கிடைக்கப் பெறும். வேலை செய்யும் இடத்தில் மேல் அதிகாரிகளின் பாராட்டுக் கிடைக்கப் பெறும்.

சம்பள உயர்வு, பதவி உயர்வுக்காகப் பல ஆண்டுகள் காத்திருந்த உங்களுக்கு அனைத்தும் ஈடேறும் காலமாக இருக்கும். தாய்- தந்தையுடன் சண்டை- சச்சரவுகள் ஏற்பட்டு பேசாமல் இருப்பீர்கள். வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

உடன் பிறப்புகளால் உங்களுக்கு வீண் விரயச் செலவுகள் ஏற்படும், குழந்தைகள் பெருமை தேடித் தரும் விஷயங்களைச் செய்வார்கள். கணவன், மனைவி இடையே புகுந்தவீடு குறித்து ஏற்படும் வாக்குவாதங்கள் சண்டைக்கு இட்டுச் செல்லும்.

கணவனின் உடன் பிறப்புகள் சொத்துகள் ரீதியான பிரச்சினைகளைச் செய்வார்கள். மாமனாரின் உடல் நலன்ரீதியாக வீண் மருத்துவச் செலவுகள் ஏற்படும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews