துலாம் சித்திரை மாத ராசி பலன் 2023!

துலாம் ராசியினைப் பொறுத்தவரை குரு பெயர்ச்சி உங்களுக்கு ஆதாயப் பலன்களைக் கொடுப்பார். சப்ஸ்தம ஸ்தான அதிபதியான செவ்வாய் தசம ஸ்தானமான கடக ராசிக்குள் சஞ்சாரம் செய்யவுள்ளார்.

செவ்வாய் பகவான் நீச்சம் அடைவதால் உங்கள் தரத்துக்குக் கீழானவர்களுடன் நட்பு ஏற்பட வாய்ப்புண்டு; கூடா நட்பினைத் தவிர்த்தல் வேண்டும். சலிப்பான பேச்சுகளை உறவினர்களிடம் கொள்வீர்கள். மேலும் குடும்ப வாழ்க்கையினைப் பொறுத்தவரை உங்கள் முன்கோபம் பெரும் பிரச்சினைகளுக்கு இட்டுச் செல்லும்.

தவறான வார்த்தைப் ப்ரயோகம் பதவி ரீதியாக பெரும் பிரச்சினைகளை ஏற்படுத்தும். சனி பார்வையில் குரு வருவது உங்களுக்கு நன்மையினையே பயக்கும். கடந்த காலங்களில் பெரிய அளவில் ஆரோக்கியக் குறைபாடுகளைச் சந்தித்துள்ளீர்கள்; தற்போது ஆரோக்கியம்ரீதியாக முன்னேற்றம் ஏற்படும்.

வீடு, மனை வாங்கும் முயற்சிகளில் தீவிரமாகக் களம் இறங்குவீர்கள். மூத்த சகோதரர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படும். மாணவர்களைப் பொறுத்தவரை சிரத்தையுடன் படித்தால் மட்டுமே வெற்றி காண முடியும்; பிள்ளைகளின் படிப்பு விஷயத்தில் அக்கறை காட்டுவது அவசியம்.

வேலைவாய்ப்பினைப் பொறுத்தவரை வளர்ச்சி ஏற்படும்; பதவி உயர்வு, சம்பள உயர்வு ஏற்படும். தொழில்ரீதியாக புதுத் தொழில் செய்ய நினைப்போர் தொழிலைத் தேர்ந்தெடுக்கும்போது கவனமாக இருத்தல் வேண்டும்.

தந்தையால் ஆதாயங்கள் ஏற்படும். குடும்பத்தில் மூன்றாம் நபர்களின் தலையீடு இல்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews