துலாம் ஆடி மாத ராசி பலன் 2022!

சனி பகவான் 4 ஆம் வீட்டிற்கு வந்துள்ளதால் தாயின் உடல் நலனில் அக்கறை தேவை. தாய் வீட்டு உறவினர்களுடன் பிரச்சினைகள் எழ வாய்ப்புண்டு. வீண்சண்டை, சச்சரவுகளை தவிர்த்தல் வேண்டும். தலைமைப் பொறுப்பு எதையும் கிடைத்தாலும் தள்ளிப் போடுதல் வேண்டும்.

உறவினர்களுடன் பிரச்சினைகளைத் தவிர்க்க அமைதியும், நிதானமுமே உதவும். திருமணம் சார்ந்த விஷயங்கள் இழுபறியிலேயே இருக்கும். வேலைவாய்ப்பு ரீதியாக நீண்ட நாள் எதிர்பார்த்திருந்த வேலைவாய்ப்புகள் கிடைக்கப் பெறும்.

தொழில்ரீதியாக கடந்த காலங்களில் சந்தித்த பிரச்சினைகள் சரியாகும். சேமிப்பு ரீதியாக கவனம் செலுத்துவீர்கள். புதிதாக முதலீடுகள் செய்து பண வரவினை பெருக்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள்.

ஆடம்பரச் செலவுகள் ஏற்படும், இதனால் மாத இறுதியில் பண நெருக்கடிக்கு ஆளாவீர்கள். புதிதாக வண்டி, வாகனங்கள் வாங்குவதற்கான கால கட்டமாக இருக்கும். பூர்விக சொத்துகளை விற்கும் நிலைக்குத் தள்ளப்படுவீர்கள்.

கடன் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. மருத்துவ ரீதியான விரயச் செலவுகள் ஏற்படும். துர்கை அம்மன், மகாலட்சுமி வழிபாடு போன்றவற்றினை செய்து வருதல் நன்மை பயக்கும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.