இந்த வாரமும் ரெண்டு லட்டு.. பிக் பாஸ் சீசன் 7 வீட்டை காலி பண்ணப் போகும் அந்த 2 பேர் யாரு?..

விஜய் டிவி மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இந்த வாரம் டபுள் எவிக்‌ஷன் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்ற நாமினேட் செய்யப்பட்டவர்கள் யார் என பார்த்தால், வழக்கம் போல ஆர்ஜே அர்ச்சனா, விசித்ரா உள்ளனர். மேலும், புல்லி கேங்கை சேர்ந்த மணி, பூர்ணிமா, மாயா, அக்‌ஷயா, ஆர்ஜே பிராவோ, ரவீனா உள்ளிட்ட போட்டியாளர்கள் இந்த வாரம் நாமினேட் செய்யப்பட்டனர்.

இந்த வாரமும் டபுள் எவிக்‌ஷன்:

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி சில நாட்கள் பெரும் சர்ச்சையை கிளப்பி சோஷியல் மீடியாவை திரும்பி பார்க்க வைக்கிறது. ஆனால், அதன் பின்னர் புஸ்ஸென போய் காணாமல் காலாவதி ஆகி விடுகிறது.

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி இதுவரையில் நடந்த சீசன் களை விட மோசமான சீசன் என்றும் சீக்கிரம் இதை முடித்துவிட்டு விஜய் டிவி வேறு ஏதாவது நிகழ்ச்சியை ஒளிபரப்பலாம் என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

பிக் பாஸ் மேடை மிகப்பெரிய மேடை என ஒவ்வொரு சீசனிலும் கமல்ஹாசன் சொல்லி வருவது சமீப காலமாக காமெடியாக மாறியுள்ளது என கலாய்த்து வருகின்றனர்.

நிகழ்ச்சியின் தொகுப்பாளர் நடுநிலையாக செயல்படவில்லை என்றும் பிரதீப் ஆண்டனியை இந்த சீசனில் இருந்து வெளியேற்றியது தான் மிகப்பெரிய தவறு என்றும் அதன் பின்னர் நிகழ்ச்சி சுவாரசியமே இல்லாமல் படு போராக எதை நோக்கி பயணிக்கிறது என்று தெரியாமல் பயணித்து வருவதாகவும் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.

அக்‌ஷயா, ஆர்ஜே பிராவோ வெளியேற்றம்

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் டபுள் எவிக்ஷன் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மாயாவின் காசிப் தோழியான பூர்ணிமா ரவி இந்த வாரம் வெளியேறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் அவர் தப்பித்து விட்டதாகவும் அவருக்கு பதிலாக அக்ஷயா உதயகுமார் இந்த வாரம் வீட்டை விட்டு வெளியேற போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் ஏற்கனவே குறைவான ஓட்டுக்கள் உடன் கடைசி இடத்தில் இருக்கும் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக உள்ளே வந்த ஆர்ஜே பிராவோவும் இந்த வாரம் எவிக்ட் ஆகி வெளியேறி உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

ஒட்டுமொத்த பிக்பாஸ் நிகழ்ச்சியையும் ஒரே வாரத்தில் எவிக்ட் செய்து விட ஏதாவது வாய்ப்பு இருக்கா கமல் சார் என்று ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...