திருவிளையாடல் படத்தின் நக்கீரர் யார் தெரியுமா? இத்தனை ஹிட் படங்கள் கொடுத்தவரா?

நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு எத்தனையோ வெற்றிப் படங்கள் இருந்தாலும் திருவிளையாடல் படம் என்பது சற்று கூடுதல் ஸ்பெஷல். ஏனெனில் அவர் ஏற்று நடித்த சிவபெருமான் கதாபாத்திரம். குழந்தைப் பருவங்களில் திருவிளையாடல் படத்தினைப் பார்த்தவர்களின் மனதில் இறைவன் சிவபெருமானாக திருவிளையாடல் சிவாஜிதான் கண்முன்னே வந்து நிற்பார். 1965-ல் வெளியான இந்தத் திரைப்படம் அந்த ஆண்டின் வசூல் சாதனைப் படமாக அமைந்தது.

படத்தில் 10 பாடல்கள். இவை ஒவ்வொன்றும் முத்துக்குமுத்தாக இந்த பாடல் அழகா அந்தப் பாடல் அழகா என்று யூகிக்க முடியாத அளவிற்கு கே.வி.மகாதேவன் இசையில் அனைத்துப பாடல்களும் இன்றும் நம் மனதில் நிற்கும் ஒலிச் சித்திரங்கள். கிராமங்கள் தோறும் திருவிளையாடல் கதை வசன கேஸட்டுகள் ரேடியோக்களில் ஒலிபரப்பப்பட்டு வசனங்கள் ரசிகர்களுக்கு மனப்பாடமாக அமைந்தது.

இத்தனை சிறப்புகளுக்குரிய திருவிளையாடல் படத்தினை இயற்றியவர் ஏ.பி.நாகரஜன். அந்தக் காலத்தில் நாம் பார்த்து ரசித்த பிரபல பக்திப் படங்களான கந்தன் கருணை, சரஸ்வதி சபதம், திருவருட்செல்வர், திருமால் பெருமை, காரைக்கால் அம்மையார், அகத்தியர் போன்ற படங்களின் இயக்குநர். இந்தப் படங்களைப் பார்த்தாலே அந்த கேரக்டர்கள் மனதில் நிழலாடும் அளவிற்கு மக்கள் மத்தியில் புகழ் பெற்றதாக விளங்கியது.

திருவிளையாடல் படத்தில் பாண்டிய மன்னனி சந்தேகத்தினைத் தீர்க்குமாறு ஒரு காட்சி இடம்பெற்றிருக்கும். அதில் பாண்டிய மன்னனின் அரசவைப் புலவராக நக்கீரர் இடம்பெற்றிருப்பார். முதலில் நக்கீரர் கதாபாத்திரத்திற்கு கவிஞர் கண்ணதாசனை நடிக்க வைக்கலாம் எனத் தோன்ற பின் தோற்றம் சரியாக இருக்கும் ஆனால் கம்பீரம் இருக்காது என எண்ணி பின்னர் சிவாஜி கணேசனின் நாடகக்குழுவில் உள்ள தங்கராஜ் என்பவரை நடிக்க வைக்க முடிவு செய்யப்பட்டது.

ரசிகர்கள் மேல அப்படி என்ன கோபம் சிவக்குமார் சார்? அன்று செல்போன்.. இன்று சால்வை..

ஆனால் சிவாஜிக்கு மனதில் என்ன தோன்றியதோ தெரியவில்லை திடீரென இப்படத்தின் இயக்குநர் ஏ.பி.நாகராஜனையே நக்கீரர் கதாபாத்திரத்தில் நடிக்கச் சொன்னார் சிவாஜி. ஆனால் இயக்குநரோ அதை மறுக்க, பின்னர் சிவாஜி நீங்கள் நக்கீரராக நடித்தால் நான் சிவனாக நடிக்கிறேன். இல்லையெனில் இந்தப் படம் வேண்டாம் எனச் சொல்ல வேறுவழியின்றி நக்கீரராக ஏ.பி.நாகராஜன் நடிக்க ஒப்புக் கொண்டார்.

பின்னர் பாண்டிய மன்னனின் அரசவையில் வரும் அந்தக் காட்சியில் சிவபெருமானைப் பார்த்து “நெற்றிக்கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே ..“ என ஆவேசமாக பேசும் வசனங்கள் போன்றவற்றைப் பேசி நடித்தார் ஏ.பி.நாகராஜன். இப்போது சில இயக்குநர்கள் தாங்கள் இயக்கும் படங்களில் ஒரு சில காட்சிகளில் வந்து நடிப்பதைப் போல அந்தக் காலத்திலயே தான் இயக்கிய படத்தில் ஒரு காட்சியில் வந்து தன் நடிப்புத் திறனையும் நிரூபித்திருக்கிறார் ஏ.பி.நாகராஜன்.

Published by
John

Recent Posts