திருப்பள்ளியெழுச்சி – திருப்பாவை பாடலும், விளக்கமும் -17



பாடல்

அம்பரமே தண்ணீரே சோறே

அறஞ்செய்யும்எம்பெருமான் நந்தகோ பாலா எழுந்திராய்கொம்பனார்க் கெல்லாம் கொழுந்தே குலவிளக்கேஎம்பெரு மாட்டி யசோதா யறிவுறாய்அம்பர மூடறுத் தோங்கி உலகளந்தஉம்பர்கோ மானே உறங்கா தெழுந்திராய்செம்பொற் கழலடிச் செல்வா பலதேவாஉம்பியும் நீயும் உறங்கேலோ ரெம்பாவாய்.

.

பாடல்

ஆடையையும், தண்ணீரையும், சோற்றையும் தருமம் செய்கின்ற எமது தலைவனாகிய நந்தகோபனே! எழுந்திருப்பாயாக. கொம்பு போன்ற இளைத்த பெண்களுக்கெல்லாம் கொழுந்து போன்றவனே..எமது தலைவியே! யசோதையே! எழுந்திராய்! ஆகாயத்தை இடமாற்றம் செய்து உயர்ந்து உலகங்களை அளந்து கொண்ட தேவர்களுக்குத் தலைவனே! தூங்காமல் எழுந்திராய்.பொன்னாலான வீரக்கழலை அணிந்த பாதங்களை உடைய செல்வா! பலதேவனே! உன் தம்பியும் நீயுமாக உறங்காமல் எழுந்திரு என்கிறார் கோதை நாச்சியார்..

விளக்கம்:

இத்தனை நாள் உறங்கிக்கொண்டிருந்த பெண்ணை எழுப்பி, நந்தகோபன் மாளிகை வாயில்காப்பவர்களை கெஞ்சி, கூத்தாடி மாளிகை வாசலில் நின்றபடி உள்ளே உறங்கிக்கொண்டிருக்கும், யசோதை, நந்தகோபன், பலராமன், கிருஷ்ணனை துயில் எழுப்புவதாய் அமைந்திருக்கு இப்பாடல்..

திருப்பாவை பாடலும், விளக்கமும் தொடரும்…

Published by
Staff

Recent Posts