திருப்பாவை பாடலும், விளக்கமும் -4


ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து
பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில்
ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்                        
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.

பொருள்:

விளக்கம்:
கடல் மழை கண்ணா! நீ எதையும் ஒளித்து எங்களுக்குக் குறை வைக்காதே!ஆழமான கடலில் புகுந்து,நீரை முகர்ந்து கொண்டு இடி இடித்து விண்ணில் ஏறி,உலகின் தொடக்கத்தின் முதல்வனான திருமாலின் மேனியைப் போலக் கறுத்து விண்ணை மறைத்து நின்று,நீண்ட அழகான தோள்கொண்ட பத்மநாபன் கையில் உள்ள சக்கரம் போல மின்னலடித்து,சங்கு போல அதிர்ந்து இடி ஒலியெழுப்பி,வெற்றியை மட்டும் கொடுக்கும் அவனுடைய வில்லாகிய சார்ங்கம் வீசிய பாணங்கள் போல் மழை பெய்யனும்.உலகம் அனைத்தும் வாழனும்.

இந்துக்களின் வழிபாடுகள் எல்லாமே மனநலம், உடல்நலம், குடும்பநலனோடு , சமூகநலனும் சேர்ந்தே இருக்குமென்பதற்கு இந்த பாடல் ஒரு உதாரணம்… உலகம் சரிவர இயங்க நீர் வேண்டும். நீர் மழையிலிருந்து கிடைக்கும். அதனாலாயே மழைவேண்டி பாடப்பட்டதே இந்த பாடல்.  

திருப்பாவை பாடலும், விளக்கமும் தொடரும்….

Published by
Staff

Recent Posts