திருபிரம்மபுர நாயகன், தேவாரம் பாடலும் விளக்கமும்- 2



பாடல்

முற்றலாமையிள நாகமோடேன முளைக்கொம்பவை பூண்டு          
 வற்றலோடுகல னாப்பலிதேர்ந்தென துள்ளங்கவர் கள்வன்      
 கற்றல்கேட்டலுடை யார்பெரியார்கழல் கையால்தொழு தேத்தப்        பெற்றம்ஊர்ந்தபிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே.  

விளக்கம்

வயது முதிர்ந்த ஆமையினது ஓட்டினையும், இளமையான நாகத்தையும், பன்றியினது முளை போன்ற பல்லையும் கோத்து மாலையாக அணிந்து, தசைவற்றிய பிரமகபாலத்தில் உண்பொருள் கேட்டு வந்து என் உள்ளம் கவர்ந்தகள்வன், கல்வி கேள்விகளிற் சிறந்த பெரியோர்கள் தன் திருவடிகளைக் கைகளால் தொழுது ஏத்த அவர்கட்கு அருளும் நிலையில் விடைமீது காட்சி வழங்கும் பிரமபுரத்தில் விளங்கும் பெருமானாகிய இவனல்லனோ!

Published by
Staff

Recent Posts