விஜய்யைவே கதறி அழ வைத்தவர்.. நடிகர் பெஞ்சமின் வாழ்வில் சந்தித்த துயரம்!

தமிழில் முன்னணி காமெடி நடிகர்களுடன் இணைந்து நடிக்கும் சக காமெடி கலைஞர்கள் ஏராளமானோர் உள்ளனர். அவர்களில் சிலர் நம்மை சிரிக்க வைத்தாலும் ஒரு சில படங்களில் நம்மை கண் கலங்க வைக்கும் கதாபாத்திரங்களிலும் நடித்து அசத்தி இருப்பார்கள். அந்த வகையில் முக்கியமான ஒருவர் தான் நடிகர் பெஞ்சமின்.

இவர் திரைப்படத்தில் காமெடி நடிகராக சாதிக்க வேண்டும் என்று பல இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களிடம் வாய்ப்பு கேட்டு திரிந்துள்ளார். அப்படி இருக்கையில் அவருக்கு சேரன், தான் இயக்கிய வெற்றிக்கொடி கட்டு என்ற படத்தில்  ஒரு காமெடி கேரக்டரை கொடுத்தார். அந்த கேரக்டர் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. அந்த படத்தில் பெஞ்சமின் வடிவேலுவுடன் இணைந்து செய்த காமெடி கலக்கலாக அமைந்திருந்தது.

இதனைத் தொடர்ந்து அவர் விஜய் நடித்த பகவதி திரைப்படத்தில் பெருமாள் என்ற கேரக்டரில் நடித்திருப்பார். விக்ரம் நடித்த சாமி திரைப்படத்தில் ஒரு கேரக்டரும், கமல்ஹாசன், மாதவன் நடித்த அன்பே சிவம் படத்தில் திரையரங்கில் வேலை செய்யும் ஒரு ஊழியராகவும் நடித்தார்.

benjamin2

நடிகர் பெஞ்சமினுக்கு மீண்டும் ஒரு திருப்புமுனையை கொடுத்த படம் என்றால் அது சேரன் இயக்கத்தில் உருவான ஆட்டோகிராப். இந்த படத்திற்கு பின்னர் விக்ரம் நண்பராக அருள் படத்திலும், வசூல்ராஜா எம்பிபிஎஸ் திரைப்படத்தில் ஒரு பிக் பாக்கெட் நபராகவும் நடித்திருந்தார். இப்படி அடுத்தடுத்து பல திரைப்படங்களில் சிறந்த கேரக்டர்கள் கிடைக்க, விஜய் படத்தில் அவர் நண்பனாக குணச்சித்திர கதாபாத்திரத்திலும் பெஞ்சமின் நடித்திருந்தார்.

கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான விஜய் நடித்த திருப்பாச்சி என்ற திரைப்படத்தின் முதல் பாதியில் படம் முழுவதும் வரும் விஜய்யின் நண்பராக நடித்திருந்தார். பெஞ்சமினை வில்லன்கள் கொலை செய்யும்போது அவரை மடியில் தூக்கி வைத்து விஜய் கதறியழும் காட்சி இன்று பார்த்தால் கூட பலரை கண்கலங்க வைக்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும்.

இந்த படத்தை அடுத்து சரத்குமார் நடித்த ‘ஐயா’, அஜித் நடித்த திருப்பதி உள்ளிட்ட படங்களில் நடித்தார். அதனை அடுத்து தமிழ் படம், மாஞ்சா வேலு, வேங்கை, மிக மிக அவசரம் போன்ற படங்களில் நடித்த நிலையில் நாடோடிகள் 2 திரைப்படத்தில் கான்ஸ்டபிள் கேரக்டரில் நடித்திருப்பார். இதனையடுத்து தற்போதும் சில படங்களில் பெஞ்சமின் தொடர்ந்து நடித்து வருவதாக தெரிகிறது.

benjamin1

இந்த நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு பெஞ்சமின் அவர்களுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது அவர் சிகிச்சைக்கு பணமில்லாமல் சக நடிகர் நடிகைகளிடம் உதவி கேட்டார். அப்போது  ஏராளமானோர் அவருக்கு உதவி செய்தனர். திரைப்படங்கள் மட்டுமின்றி தொலைக்காட்சி  தொடர்களில் பெஞ்சமின் நடித்துள்ளார். மர்ம தேசம், விடாது கருப்பு என்ற தொடரிலும் ரமணி வர்சஸ் ரமணி என்ற தொடரிலும் அவர் நடித்துள்ளார்.

தற்போது பெஞ்சமினுக்கு 58 வயது ஆகிய போதிலும் இன்னும் அவர் சுறுசுறுப்பாக நடிப்பதற்கு தயாராக இருக்கிறார். அவருக்கு ஏற்ற கேரக்டர்களை இயக்குனர்கள் கொடுத்தால் நிச்சயம் அவர் ஒரு படத்தை வெற்றியடைய செய்ய தன்னால் முடிந்த பங்களிப்பை அளிப்பார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.