கந்த சஷ்டி விழாவுக்கு பொதுமக்கள் அனுமதி இல்லை

முருகப்பெருமான் அசுரனை அழித்து நீதியை நிலைநாட்டிய இடமாக கருதப்படும் இடம் அறுபடை வீடுகளில் ஓன்றான திருச்செந்தூர் ஆகும். இங்கு தளபதி வீரபாகு தலைமையில் முருகப்பெருமான் போர்புரிந்து ஆணவம் மிகுந்த அசுரனை அழித்தார்.

இதனை ஒட்டி வருடா வருடம் தீபாவளிக்கு பிறகு 7 நாட்களில் கந்த சஷ்டி விழா வரும். இந்த வருட கந்த சஷ்டி விழா வரும் 11.10.2021 அன்று வருகிறது

இந்த விழா அறுபடை வீடுகளில் நடந்தாலும் திருச்செந்தூரில் மிக புகழ்பெற்றதாகும். திருச்செந்தூரில் ஆன்றோர்கள் சான்றோர்கள், சாமியார்கள், மடாதிபதிகள், பொதுமக்கள் என எல்லோரும் இந்த விழாவில் கலந்து கொள்வார்கள்.

திருச்செந்தூரில் தான் முருகப்பெருமான் தாராகசுரன் என்ற அசுரனை வதம் செய்தார் என்ற காரணத்தால் திருச்செதூரில் இவ்விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு இவ்விழாவுக்கு பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என அரசு சார்பில் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews