விநாயகர் சதுர்த்தி அன்று செய்ய வேண்டியவை!

விநாயகர் சதுர்த்தி அன்று அதிகாலையிலேயே எழுந்து குளித்துவிட்டு வீட்டையும் நன்றாக சுத்தமாக்கிக் கொள்ள வேண்டும். பின் வாசலில் மாவிலை தோரணம் கட்டலாம். பூஜையறையை நன்றாக சுத்தம் செய்து ஒரு மணையை வைக்க வேண்டும். 

முதலில் விநாயகர் பூஜை செய்து கொள்ள வேண்டும். அதன் பிறகு விநாயகரிடம் நான் என்னுடைய சதுர்த்தி விரதத்தை நல்ல முறையில் அனுஷ்டிக்கப் போகிறேன். எனவே எந்தவித தடைகளும் இல்லாமல் அருள்புரிய வேண்டுகிறேன் என பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும்.


     பூஜை அறையில் கோலம் போட்டு ஒரு தலை வாழை இலையை வைக்க வேண்டும். இலையின் நுனி வடக்கு பார்த்ததுபோல வைத்து  இந்த இலையின் மேல் பச்சரிசியைப் பரப்பி வைத்து நடுவில் களிமண்ணாலான பிள்ளையாரை வைக்க வேண்டும்.  பலவகை புஷ்பங்கள் மற்றும் அறுகம்புல் மாலையினால் அலங்கரிக்க வேண்டும்.

     பின் விநாயகர் பாடல்கள் பாடி வணங்கி விரதத்தை முடித்து கொள்ள வேண்டும். பின் களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகரை கிணற்றிலோ அல்லது நீர்நிலையிலோ கொண்டுபோய் கரைப்பது வழக்கம்.

Published by
Staff

Recent Posts