விஜய்யை ஆட்டி வைக்கும் திண்டிவனம் ஜோதிடர்.. அரசியல் என்ட்ரிக்கு ஆருடம்..!

விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்த தகவல்களை பிரபல பத்திரிகைகள் பகிர்ந்துள்ளனர்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். அவ்வப்போது அரசியல் பின்புலத்தில் சில கருத்துக்களை கூறி அரசியலில் குதிக்கும் எண்ணத்தில் தான் (விஜய்) இருப்பதாக வெளிக்காட்டிக் கொள்பவர்.

WhatsApp Image 2023 06 19 at 7.08.44 PM

பீஸ்ட் படத்திற்கு பிறகு நடிகர் விஜய் நடிப்பில் ‘வாரிசு’ படம் கடந்த ஜனவரி மாதம் 11 ஆம் தேதி வெளியானது. இப்படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்கி இருந்தார்.

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு மற்றும் ஷிரிஷ் தயாரித்தனர்.
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இருப்பினும் 300 கோடி ரூபாய் வசூல் செய்தது என்றும் தயாரிப்பாளர் தரப்பில் அறிவிக்கப்பட்டது.

WhatsApp Image 2023 06 19 at 7.08.37 PM

வாரிசு படத்தினை தொடர்ந்து நடிகர் விஜய்யின் அடுத்த 67-வது லியோ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது.

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடிக்கிறார். மேலும் பிரியா ஆனந்த், சஞ்சய் தத், மிஷ்கின், கௌதம் மேனன், அர்ஜூன், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ் ஆகியோரும் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

WhatsApp Image 2023 06 19 at 7.08.47 PM

நடிகர் விஜய்யின் 68-வது படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க உள்ளார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிகில் படத்தினை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் இந்த புதிய படத்தினை தயாரிக்க உள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசை அமைக்கிறார்.

சமீபத்தில் நடிகர் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் 234 தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு பரிசளிக்கும் விழா நடத்தப்பட்டது. இதில் நடிகர் விஜய் கலந்து கொண்டார். அப்போது பேசிய விஜய், அரசியல் ரீதியாக சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். இந்த கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் அதிக அளவில் வைரலானது.

இச்சூழலில் விஜய் அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் அரசியலில் குதித்து தேர்தல் ஆழம் பார்ப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக பிரபல திண்டிவனம் ஜோதிடர் ஒருவரை மக்கள் இயக்க நிர்வாகி புஸ்ஸி ஆனந்த் விஜய்யிடம் அறிமுகம் செய்து வைத்துள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த ஜோதிடர் சொல்படி தான் விஜய் தற்போது செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஜோதிடர் அதிமுக முன்னாள் பொதுச் செயலாளர் சசிகலா, முன்னாள் எம் பி தினகரன் மற்றும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆகியோருக்கு நெருக்கமானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...