Categories: ஜோதிடம்

மகம் நட்சத்திரத்துக்கு உகந்த தில்லைக்காளியம்மன்


சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு மிக அருகில் உள்ளது தில்லைக்காளியம்மன் கோவில். தில்லை எனப்படும் சிதம்பரத்தையும் அதன் எல்லையையும் காப்பவள் தில்லைக்காளி. மிகவும் சக்தி வாய்ந்த இக்கோவிலில் எப்போதும் பெண்கள் கூட்டம் அலைமோதும். இங்குள்ள தில்லைக்காளி உக்கிரத்துடன் கிழக்கு நோக்கி அமர்ந்த கோலத்தில் இருக்கிறாள். இங்குள்ளதில்லைகாளியம்மனுக்கு  நல்லெண்ணெய் அபிஷேகம் மிகவும் உகந்தாக கருதப்படுகிறது.காளிக்கு  குங்குமத்தால் காப்பிட்டு உடல் முழுவதும் மறைக்கப்படுகிறது. தம்மை வழிப்படுவோர்க்கு சாந்தமே கொண்டிருப்பதாக வெள்ளை வஸ்திரம் சூடி குறிப்பில் உணர்த்துகின்றாள். பெண்களுக்கு விதவைக் கோலம் ஏற்படாதிருக்க தாமே விதவையாக வெள்ளை வஸ்திரம் தரித்து சுமங்கலிகளுக்கு அருள் செய்கிறாள் என்றும் இந்த அம்மனை பற்றி கூறுவர். தில்லைகாளியம்மன் மகம் நட்சத்திரகாரர்களுக்கு அதிதேவதை ஆவாள், எனவே மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட்டால் மிகவும் சிறப்பு என்று கூறப்படுகிறது.

Published by
Staff

Recent Posts