ஒரு மாசத்துல கொடுத்துடுறேன்.. திருட்டு போன 60,000 பணம்.. கூடவே இருந்த திருடனின் எமோஷனலான கடிதம்..

இன்றைய காலகட்டத்தில் எல்லாம் அனைத்து வீடுகள் மற்றும் தெருக்கள், சாலைகள் உள்ளிட்ட பல இடங்களில் சிசிடிவி கேமராக்கள் நிரம்பி வழிந்தாலும் திருடர்கள் தொல்லை குறைந்த பாடில்லை. ஒவ்வொரு நாளும் செய்தித்தாள்களிலும், சமூக வலைத்தளங்களிலும் பல வசதியுள்ள வீடுகள் மற்றும் அலுவலகங்கள் என பல இடங்களில் ஏராளமான பணங்கள் மற்றும் விலை மதிப்புள்ள பொருட்கள் திருடு போவதை பற்றிய செய்திகளை நிச்சயம் கடந்து வந்திருப்போம்.

இதனை தடுப்பதற்கு பல வழிகளை போலீசார் மற்றும் பொதுமக்கள் மேற்கொண்டு வந்தாலும் இவை அனைத்தையும் தாண்டி பல தந்திரமான திருடர்கள் இதுபோன்ற தவறான செயல்களில் ஈடுபட்டு மக்களுக்கு அதிர்ச்சியும் கொடுத்து வருகின்றனர். மேலும் சிலரின் திருட்டு சம்பவங்கள் தொடர்பான திருட்டு வீடியோக்கள் கிடைத்தாலும் கூட அவர்களை கண்டுபிடிப்பதே மிக அரிதான சம்பவமாக இருக்கிறது.

அப்படி ஒரு சில திருட்டு சம்பவங்கள் பெரிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வந்தாலும் இன்னும் சில திருட்டு சம்பவங்கள் பின்னால் இருக்கும் விஷயம் வினோதத்தையும் அதே வேளையில் உருக்கமான விஷயத்தையும் கடந்து வரும். இதனுடைய சமீபத்தில் திருச்செந்தூர் பகுதியில் நடைபெற்ற திருட்டு சம்பவம் ஏறக்குறைய அப்படி ஒரு நிகழ்வாக தான் அமைந்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள மெஞ்ஞானபுரம் என்னும் பகுதியைச் சேர்ந்தவர் தான் சித்திரை செல்வின். இவர் ஒரு ஓய்வு பெற்ற ஆசிரியர் என தகவல்கள் தெரிவிக்கும் நிலையில், இவர்களது பிள்ளைகளுக்கும் திருமணமாகி வெளியூரிலும் வசித்து வருவதாக கூறப்படுகிறது.

இதனிடையே சமீபத்தில் தனது மகனுக்கு குழந்தை பிறந்ததாக சித்திரை செல்வின் தனது மனைவியுடன் சென்னைக்கு சமீபத்தில் சென்றுள்ளனர். மேலும் வீட்டை பராமரிப்பதற்காக ஒரு பெண்ணிடம் வீட்டுச் சாவியை கொடுத்து சென்றுள்ளதாக கூறப்படுகிறது. அப்படி சமீபத்தில் வீடு திறக்க வந்த அந்த பெண்ணிற்கு கடும் அதிர்ச்சி ஒன்றும் காத்திருந்துள்ளது.

கதவு திறந்து கிடக்க, பொருட்கள் திருட்டு போனதாக கூறப்படும் நிலையில் உடனடியாக சித்திரை செல்வினுக்கும், காவல் நிலையத்திற்கும் அந்த பெண் தகவல் கொடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவர்கள் தெரிவித்த விவரத்தின் படி பீரோவில் இருந்து 60 ஆயிரம் பணம் மற்றும் சில தங்க நகைகளும் களவு போனதாக கூறப்படுகிறது.

அத்துடன் மட்டுமில்லாமல் போலீசாருக்கு மற்றொரு கடிதமும் அங்கே இருந்து சிக்கி உள்ளதும் கவனத்தை பெற்றுள்ளது. அதாவது திருடன் எழுதிய அந்த கடிதத்தில், ‘என்னை மன்னித்து விடுங்கள். இன்னும் ஒரு மாதத்தில் இந்த பணத்தை திருப்பித் தந்து விடுகிறேன். மனைவிக்கு உடம்பு சரி இல்லை அதனால் தான்’ என உருக்கமான வாழ்க்கை வார்த்தைகளை எழுதி உள்ளார்.

இந்த திருட்டு சம்பவத்தை விடவும் அந்த திருடன் நிலையை பற்றிய அவர் எழுதிய வார்த்தைகள் தான் தற்போது பலரையும் உருக வைத்துள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews