கலைஞர் மகளிர் உரிமை தொகை.. கிரீன் சிக்னல் காட்டிய தமிழக அரசு.. பெண்களுக்கு ஸ்வீட் சர்ப்ரைஸ்

சென்னை: கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில் நல்ல செய்தி ஒன்று சென்றுள்ளது.

‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்’ என்பது குடும்பத்திற்காக வாழ்நாளெல்லாம் ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் பெண்களின் உழைப்புக்குக் கொடுக்கும் அங்கீகாரமாக பார்க்கப்படுகிறது. மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை என ஆண்டுக்கு 12 ஆயிரம் ரூபாய் தருகிறது முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு.

இந்ததிட்டத்தின் முக்கிய அம்சங்கள் : குடும்ப அட்டையில் ஆண் குடும்பத் தலைவரின் மனைவியின் பெயர் ஏதேனும் காரணத்தினால் இல்லாத பட்சத்தில், குடும்பத்திலுள்ள இதர பெண்களில் ஒருவர் குடும்பத்தலைவியாக கருதப்படுவார். ஒரு குடும்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட 21 வயது நிரம்பிய பெண்கள் இருந்தால், இத்திட்டத்தின்கீழ் பயன்பெற, ஒரு நபரைக் குடும்ப உறுப்பினர்கள் தேர்வு செய்து விண்ணப்பிக்கச் செய்யலாம்.

சமூகத்தில் வெற்றி பெறக்கூடிய ஒவ்வொரு ஆணுக்குப் பின்னாலும் ஒரு பெண் இருப்பார் என்று கூறுவதுண்டு. உண்மையில், ஒவ்வொரு நாளும் தன் திறனுக்கேற்ற பணிபுரிந்து, பொருள் ஈட்டும் ஒவ்வொரு ஆணுக்குப் பின்னாலும், அவரது தாய், சகோதரி, மனைவி, மகள் ஆகிய பெண்களின் பல மணிநேர உழைப்பு மறைந்து இருக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது.

ஒவ்வொரு ஆணின் வெற்றிக்காகவும், அவரவர் குழந்தைகளின் கல்வி, உடல் நலம் காக்கவும் இந்தச் சமூகத்திற்காகவும், வீட்டிலும், வெளியிலும் ஒரு நாளைக்குப் பல மணி நேரம் பெண்கள் உழைத்துக் கொண்டு இருக்கிறார்கள். இந்த உழைப்புக்கு ஊதியம் கணக்கிடப்பட்டிருந்தால், குடும்பச் சொத்துகள் அனைத்திலும் சமமாகப் பெண்கள் பெயரும், சட்டம் இயற்றாமலேயே இடம் பெற்றிருக்கும்.

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன் பெற விண்ணப்பிக்கும் குடும்பங்கள் கீழ்க்காணும் மூன்று பொருளாதார அளவுகோல்களுக்கு உட்பட்ட குடும்பங்களாக இருக்க வேண்டும். ஆண்டுக்கு ரூ.2.5 இலட்சத்திற்குக் கீழ் வருமானம் ஈட்டும் குடும்பங்கள். ஐந்து ஏக்கருக்குக் குறைவாக நன்செய் நிலம் அல்லது பத்து ஏக்கருக்குக் குறைவாகப் புன்செய் நிலம் வைத்துள்ள குடும்பங்கள். ஆண்டிற்கு வீட்டு உபயோகத்திற்கு 3600 யூனிட்டிற்கும் குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்கள் விண்ணப்பிக்கலாம்.

அதேநேரம் பொருளாதாரத் தகுதிகளுக்காகத் தனியாக வருமானச் சான்று அல்லது நில ஆவணங்களைப் பெற்று விண்ணப்பத்துடன் இணைக்கத் தேவையில்லை. அதை ஆன்லைன் மூலமே அரசு கண்டுபிடித்துவிடும். உங்கள் ஆதாரை தட்டினால் உங்கள் வங்கி கணக்கு நிலவரம் அத்தனையும் அரசுக்கு தெரியும் என்பதால் வருமான வரி கட்டுபவரா இல்லையா என்பதை அரசு கண்டுபிடித்துவிடும். உங்களுக்கு நிலம் எவ்வளவு உள்ளது, சொத்துக்கள் எவ்வளவு உள்ளது என்பதையும் கண்டுபிடித்துவிடும்.

கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் புதிதாக இணைவது எப்படி– இந்த திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 8 லட்சம் பெண்கள் கலைஞர் மகளிர் உரிமை தொகை பெற்று வருகிறார்கள். இன்னும் சுமார் 1.40 லட்சம் பேருக்கு பணம் வழங்கப்பட உள்ளது. தற்போது புதிதாக விண்ணப்பம் செய்யபவர்கள், ஏற்கனவே விண்ணப்பம் செய்து நிராகரிக்கப்பட்டவர்கள் இதில் இணையலாம்.

அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்களின் மனைவிகள் இதற்கு விண்ணப்பிக்கலாம். கார்ப்பரேஷன் ஊழியர்களின் மனைவிகள் விண்ணப்பிக்கலாம். வேறு சில காரணங்களுக்காக நிராகரிக்கப்பட்டவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க முடியும்.

அதன்படி மகளிர் உரிமைத்தொகை விரிவாக்கத்தில் புதிய பயனாளிகளுக்கு விண்ணப்பம் செய்ய இன்னும் 30 நாட்கள் மட்டுமே அவகாசம் இருக்கிறது.

இந்த நிலையில்தான் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில் நல்ல செய்தி கிடைத்துள்ளது. 1.80 லட்சம் பேர் மேல்முறையீடு மற்றும் புது விண்ணப்பம் செய்ய வாய்ப்பு இருக்கும் நிலையில், அதில் 90 சதவிகிதம் பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட வாய்ப்பு உள்ளதாம். எனவே இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் விண்ணப்பிக்கலாம். அதேபோல் நிராகரிக்கப்பட்டவர்களும் இப்போது விண்ணப்பிக்கலாம். கண்டிப்பாகஇந்த முறை விண்ணப்பம் ஏற்கப்பட வாய்ப்பு உள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews