எதிரிகளை வெல்ல தேவாரப்பாடல்

dee526c468add85415249c2466fe46a6
நம் எல்லோருக்கும் ஏதாவது ஒரு வகையில் யாராவது எதிரி இருப்பார்கள். இவர்களை சமாளிப்பது என்பது பலருக்கும் கஷ்டமான ஒரு நிகழ்வாக இருக்கும். அப்படி இருப்பவர்கள் இந்த இரு தேவாரப் பாடல்களைத் தொடர்ந்து பாராயணம்செய்து, சிவபெருமானை மனதார வேண்டி நின்றால் சத்ரு பயம் நாசமாகும்.

எதிரிகளை வெல்ல ஒரு எளிய மந்திரம்
திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிய ‘திருஆவடுதுறை’ பதிகத்தில் இடம்பெறும் வரும் இரு தேவாரப் பாடல்களைத் தொடர்ந்து பாராயணம்செய்து, சிவபெருமானை மனதார வேண்டி நின்றால் சத்ரு பயம் நாசமாகும்.

வக்கரன் உயிரை வவ்வக் கண்மலர் கொண்டு போற்றச்
சக்கரம் கொடுப்பர் போலும்! தானவர் தலைவர் போலும்!
துக்கமா மூடர் தம்மைத் துயரிலே வீழ்ப்பர் போலும்
அக்கரை யார்ப்பர் போலும் ஆவடுதுறையனாரே.

விடைதரு கொடியர் போலும்! வெண் புரி நூலர் போலும்!
படைதரு மழுவர் போலும்! பாய்புலித் தோலர் போலும்!
உடைதரு கீளர் போலும்! உலகமும் ஆவார் போலும்!
அடைபவர் இடர்கள் தீர்க்கும் ஆவடுதுறையனாரே.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.