விநாயகர் வழிபடும் முறை உருவான கதை!!

அருகம்புல் மாலை

அனலாசுரன் என்ற அசுரன் மக்களை அனலாய் மாற்றி எரித்து வந்தான். இதனால் மக்கள் விநாயகரை வழிபட அவனை அழிக்க நினைத்த விநாயகர் கோபத்தில் அவனை விழுங்க, வயிற்றுக்குள் சென்ற அசுரன் அனலைக் கக்கினான்.

விநாயகரை குளிர்விக்க கங்கை நீர் அபிஷேகம் செய்யப்பட்டபோதும் எரிச்சல் அடங்காததால் அருகம்புல்லை தலையில் வைக்கப்பட்டது, அருகம்புல்லின் குளிர்ச்சி விநாயகரின் எரிச்சலை குறைத்தது.


தலையில் குட்டிக்கொள்ளுதல்

ஒரு முறை அகத்தியர் கமண்டலத்தில் இருந்த கங்கை நீரை காகம் வடிவில் வந்து விநாயகர் கவிழ்த்து விட்டார்.

அதனால் கோபம் கொண்ட அகத்தியர், அந்தணச் சிறுவன் வடிவில் விநாயகர் அகத்தியர் முன் வந்து நின்ற போது தலையில் குட்டினார்.

விநாயகர் காவிரியை உருவாக்க அப்படி செய்ததாகக் கூற, தவறினை உணர்ந்த அகத்தியர் தன் தலையிலேயே குட்டிக் கொண்டார். இப்படித்தான் விநாயகர் வழிப்பாட்டில் தலையில் குட்டிக்கொள்ளும் வழக்கம் வந்தது.

தோப்புக்கரணம் போடுதல்

கஜமுகாசுரன் என்ற அசுரன் தேவர்களை அடிமைப்படுத்தி வைத்திருந்ததோடு தோப்புக்கரணம் போட வைத்தான்.

விநாயகர் அசுரனை அழித்து தேவர்களைக் காத்தார். அதனால் தேவர்கள் விநாயகரை தோப்புக்கரணம் போட்டு வழிப்பட்டனர்.

Published by
Staff

Recent Posts